Vitamin B12 Deficiency: நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்களும் மினரல்களும் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் பி12 ஒரு முக்கியமான வைட்டமின் ஆகும். இது நமது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இரத்த அணுக்களை உற்பத்தி செய்யவும் மிகவும் உதவியாக இருக்கின்றது. உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், அதனால், பலவீனம், சோர்வு, இரத்த சோகை மற்றும் நினைவாற்றல் இழப்பு போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனினும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியமாகும். சில இயற்கையான வழிகளிலும் வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்யலாம். சில பழங்களை வழக்கமான உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் வைட்டமின் பி 12 குறைபாட்டை விரைவாக குணப்படுத்த முடியும். வைட்டமின் பி12 குறைப்பாட்டை சரி செய்யும் அந்த பழங்கள் எவை? இவற்றால் கிடைக்கும் பிற நன்மைகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவும் 2 பழங்கள்:
1. வாழைப்பழம்
வாழைப்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இதனால் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதால், இது ஒரு சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது. இது வைட்டமின் பி 12 இன் நல்ல மூலமாகவும் உள்ளது. இதில் அதிக அளவில் உள்ள பொட்டாசியமும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. இதுமட்டுமின்றி வாழைப்பழம் உடலில் செரிமான அமைப்பையும் சரிசெய்கிறது. வாழைப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதன் காரணமாக தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. வைட்டமின் பி12 குறைப்பாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொள்ளலாம்.
2. ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. ஆனால், இது வைட்டமின் சி குறைப்பாட்டையும் சரி செய்ய உதவுகின்றது. ஆரஞ்சு பழத்தை காலையில் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. இதுமட்டுமின்றி, உடலில் வைட்டமின் பி 12 அளவையும் அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பளபளப்பாக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கின்றன. ஆரஞ்சு சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்துகிறது.
வைட்டமின் பி12 குறைபாட்டின் அற்குறிகள்
- சோர்வு
- பலவீனம்
- மஞ்சள் காமாலை
- இரத்த சோகை
- நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள்
- நினைவாற்றலில் பிரச்சனை
- மனநிலை மாற்றங்கள்
- மனச்சோர்வு
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் இந்த இரண்டு பழங்களையும் காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலில் உள்ள வைட்டமின் பி12 குறைபாட்டை (Vitamin B12 Deficiency) நீக்குவதோடு மட்டுமல்லாமல், உடலில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
நமது உடல், இதயம் மற்றும் மூளை ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நம் உடலில் போதுமான அளவு வைட்டமின் பி12 (Vitamin B12) இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். வைட்டமின் பி12 சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க | Blood Thinner Foods: இரத்தத்தை மெலித்து... மாரடைப்பை தடுக்கும் சிறந்த உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ