உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி: அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நாம் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் வாக்கிங், அதாவது நடைப்பயிற்சியும் ஒன்று. ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். தினமும் நடைப்பயிற்சி செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.
காலையிலும், இரவு உணவுக்குப் பிறகும் அடிக்கடி நடைபயிற்சி செய்வது நல்லது. ஆனால் உடல் ஃபிட்டாக இருக்கவும், தொப்பை குறையவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அடிக்கடி எழுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
நடைபயிற்சியால் எடை இழப்பில் கிடைக்கும் நன்மைகள்
தினமும் நடைபயிற்சி செய்தால், உடல் எடையை குறைப்பதும், தொப்பையை குறைப்பதும் எளிதாகிறது. நீங்கள் சிறந்த முடிவுகளை அடைய விரும்பினால், சாதாரண நடைப்பயிற்சிக்குப் பதிலாக வேகமாக நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 8 முதல் 10 மணி நேரம் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு கரோனரி தமனி நோய், மூன்று நாள நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உடல் செயல்பாடு குறைவதால் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் அதிகரிக்கும். ஆகையால், தினமும் உடலில் இயக்கம் இருப்பதையும், உடல் ஆக்டிவ்வாக இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்: எச்சரிக்கையாக இருங்கள்!!
ஆய்வில் தெரியவந்துள்ளது
மூன்றரை மாதங்களுக்கு, உணவை மாற்றாமல், தினமும் சுமார் ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்தால் பெண்கள் தங்கள் தொப்பையை 20 சதவிகிதம் குறைக்க முடியும் என கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆகையால், அனைவரும் அதிக அளவில் நடக்க முயற்சிப்பது நல்லதாகும். ஏனென்றால் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
ஒரு நாளில் எவ்வளவு நடக்க வேண்டும்?
நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கவும், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் விரும்பினால், நீங்கள் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் (ஸ்டெப்ஸ்) நடக்க வேண்டும். தினமும் நீங்கள் இப்படி செய்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பல ஆச்சரியமான பலன்கள் கிடைக்கும். அதன் பலன் சில வாரங்களில் தெரியும்.
நடைபயிற்சியின் மற்ற நன்மைகள்
நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் விறைப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கும். இது தவிர இது நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆகையால் தினமும் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்கலாமா... நிபுணர்கள் கூறுவது என்ன!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ