சோயாபீன் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்: சைவ உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போதெல்லாம், பெரும்பாலானோர் சோயாபீனை தேர்வு செய்கிறார்கள். சோயாபீனில் அதிக அளவு புரதம் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது பிரபலமான உணவாகும். சோயாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி குறிப்பிடுகையில், புரதம் தவிர, கால்சியம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான தாதுக்கள் இதில் காணப்படுகின்றன. பெரும்பாலானோர், சோயா, டோஃபு பன்னீர், சோயா பால் மற்றும் சோயா பவுடர் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்கிறார்கள். இதில் இருக்கும் புரதம் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, ஹார்மோன்களை சமநிலைப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், ஆற்றலை வழங்குதல், எலும்புகள், தசைகளை உருவாக்குதல் போன்ற முக்கியமான செயல்பாடுகளைச் செய்வதற்கு இன்றியமையாதவை.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு
ஆனால், சோயாபீன் அதிகமாக உட்கொள்வதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சோயாபீன் அல்லது சோயா பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் என்ன வகையான உடல்நலப் பிரச்சனைகள் (Health Tips) அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். ஏன்னென்றால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு.
செரிமான அமைப்பை பாதிக்கும்
சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், சோயாபீன் ஜீரணிக்க நேரம் எடுக்கும். இந்த காரணத்திற்காக, சோயாபீன் செரிமானம் செய்வதில் பலர் சிரமங்களை சந்திக்க நேரிடும். சோயாபீன் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனால் வாய்வு, வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் படிக்க | ஒல்லியான உடல் வாகை பெற... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ தானியங்களுக்கு மாறுங்க!
ஹார்மோன் கோளாறுகள்
தாவர அடிப்படையிலான கலவையான பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் சோயாவில் காணப்படுகின்றன. இதனால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இது உடல் பருமன், தைராய்டு மற்றும் ஆண்மை பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும் போது ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாகும். பெண்களுக்கு தண்ணீர் உடலில் தங்குவதால் பருமன் அதிகரிக்கும். மேலும் , வயிறு உப்புசம், முகப்பரு ஏற்படலாம். விசித்திரமான மனநிலை மாற்றங்கள்ஏற்படும்.
தோல் ஒவ்வாமை பிரச்சனை
நிபுணர்களின் கூற்றுப்படி, சோயாபீன் ஒரு ஒவ்வாமை தூண்டும் உணவு, அதன் நுகர்வு பல வகையான ஒவ்வாமை எதிர்வினைகளை அதிகரிக்கும். இது உடலிலும் சருமத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். சோயாபீன் சாப்பிடுவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் வீக்கம், கொதிப்பு, சொறி போன்ற தோல் பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும், சோயாபீனின் அதிகப்படியான நுகர்வு சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சோயாபீன் சாப்பிடுவதும் அனாபிலாக்ஸிஸை ஏற்படுத்தும்.
யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்
சோயா பொருட்களை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் நமது உடலில் புரதத்தின் அளவு அதிகரித்து யூரிக் அமிலத்தின் அளவும் அதிகமாகி விடும். இதனால் மூட்டுகளில் யூரிக் அமில படிமங்கள் சேர்ந்து விடும். இதனால் மூட்டுகளில் மிகுந்த வலி ஏற்படும். சிறுநீரகம் பாதிப்படையும் வாய்ப்பும் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | அறிவாற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ‘8’ விஷயங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ