நம்மில் பெரும்பாலோர் நோய்வாய்ப்படுவதற்கான முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்ட்ர்ஹி குறைவது தான். சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டு, நீங்கள் தொடர்ந்து நோய்வாய்ப்படுகிறீர்கள் என்று நீங்கள் உணர்ந்தால் அல்லது நோய் பாதிப்பு அல்லது சளியிலிருந்து நீங்கள் குணமடைய நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகிவிட்டது என்று அர்த்தம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் நச்சுக்களால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பாகும். நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. எனவே தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இந்நிலையில், பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
போதுமான தூக்கம் இல்லாத நிலை
போதுமான தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு (Health Tips) மிகவும் முக்கியமானது. தூக்கத்தின் போது உங்கள் உடல் சைட்டோகைன்கள் எனப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவும் புரதங்களை வெளியிடுகிறது. போதுமான தூக்கம் இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. ஆராய்ச்சியின் படி, குறைவான தூக்கம் உங்கள் உடலை வைரஸ்கள் மற்றும் கிருமிகளுக்கு இரையாக ஆக்குகிறது. தொற்று நோய்களிலி இருந்து மீளவும் நீண்ட நேரம் எடுக்கும்.
மன அழுத்தம்
ஆராய்ச்சியின் படி, ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி காலியாகிவிடும். வெறும் 30 நிமிடங்களிலேயே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. எனவே, தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் தாக்கம் என்ன என்பதை ஒருமுறை சிந்தித்துப் பாருங்கள்?
வைட்டமின் டி குறைபாடு
குளிர்காலத்தில் சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெறுவது சற்று கடினமாக இருக்கலாம் ஆனால் சாத்தியமற்றது அல்ல. எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வைட்டமின் டி குறைபாடு நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மட்டுமல்லாமல் உடலை பலவீனம் அடையச் செய்கிறது. சூரிய ஒளி உடல் படுவதன் மூலம் வைட்டமின்களைப் பெறலாம். இது தவிர, சால்மன், மத்தி, ஹெர்ரிங் மற்றும் கானாங்கெளுத்தி மீன்கள், முட்டை, சிவப்பு இறைச்சி போன்றவற்றிலிருந்தும் வைட்டமின் டி பெறலாம்.
மேலும் படிக்க | முதுகு வலியை சரிசெய்ய..‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்!
பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கும் பழக்கம்
பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலில் வெள்ளை இரத்த அணுக்களை உற்பத்தி செய்து தொற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. ஹார்வர்ட் டிஎச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் கூறுகிறது, 'ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்களில் குறைபாடுள்ள உணவானது நோயெதிர்ப்பு செல்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை பாதிக்கிறது.' பழங்கள் மற்றும் காய்கறிகள் ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரம் என்பது அனைவருக்கும் தெரியும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருந்தல்
நம்மில் பெரும்பாலோர் நேரம் இல்லை எனக் கூறி உடல்பயிற்சி ஏதும் செய்வதில்லை. ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் என்று ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. தினசரி நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.இது உடலை கிருமிகளிலிருந்து சிறப்பாக பாதுகாக்க உதவுகிறது.
மேலும் படிக்க | இறைச்சி, மீனை விட அதிக ஆற்றலை கொடுக்கும் டாப் ‘5’ சைவ உணவுகள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ