அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த குற்றம் தொடர்பான வழக்கு பிரான்சின் ஜோன்ஜாக் வழக்கு என்று விவரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் ஒரு உயர் அறுவை சிகிச்சை நிபுணர் சுமார் 250 அப்பாவிகளை பாலியல் வன்கொடுமை உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. 66 வயதான மருத்துவர் ஜோயல் லீ ஸ்கூர்னெக், கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக தன்னிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அறுவைசிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, பாலியல் வன்முறை நடைப்பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 14 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவிகளுடன் பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டதாக குறிப்பிட்ட இந்த மருத்துவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததாக கூறப்படுகிறது.
எனினும் 2017-ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தால் இவர் மீண்டும் மருத்துவதாக தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே 2017-ஆம் ஆண்டில் இவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது பிரான்சில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் மிகப்பெரிய ஊழலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மருத்துவரின் மீதான குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் வயிற்று அறுவை சிகிச்சையில் நிபுணராக இருந்ததாகவும், இவரிடன் சிகிச்சைக்கு வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என இரு பாலரையும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரங்கள் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர், சிறுமிகளை தான் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை எனவும், ஆனால் அவர்களிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட மருத்துவரிடம் இருந்து ஒரு சிறப்பு நாட்குறிப்பையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த நாட்குறிப்பில் மருத்துவரால் பாதிக்கப்பட்ட 250 குழந்தைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.