BEER Facts: தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? பீரின் பக்கவிளைவுகள்

Beer Consumption: தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்தை என்ன செய்யும்? பீர் அருந்துவதற்கு முன் அதன் பின்விளைவுகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 2, 2022, 07:26 AM IST
  • பீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய கேடுகள்
  • மது அருந்துவதற்கும் பீர் குடிப்பதற்கும் உள்ள வேறுபாடு
  • பீரின் பின் விளைவுகள்
BEER Facts: தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? பீரின் பக்கவிளைவுகள் title=

புதுடெல்லி: தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்தை என்ன செய்யும்? பீர் அருந்துவதற்கு முன் அதன் பின்விளைவுகளைப் புரிந்து கொள்ளுங்கள்! மது அருந்துபவர்களில் பலர் தினமும் பீர் அருந்துகின்றனர். அதில் ஆல்கஹால் அளவு மிகவும் குறைவு என்றும், தினசரி பீர் குடிப்பது உடலுக்கு நன்மை செய்யும் என்பது அவர்களின் வாதமாக இருக்கும். உண்மையில், தினமும் பீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்பதை தெரிந்துக் கொண்டால், தவறான சுகாதார நம்பிக்கைகளில் இருந்து வெளிவரலாம்.

மேலும் படிக்க | விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சிலர் அன்றாடம் விரும்பும் பானங்களில் ஒன்று பீர். விலை மலிவானது என்பதுடன் அனைத்து மதுபான கடையிலும் சுலபமாகக் கிடைக்கும். உடலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாது என்று நினைத்து, மக்கள் இந்த பானத்தை தேர்வு செய்கிறார்கள். ஆனால், இதை தினமும் குடிப்பது நல்லதா?

மிதமான பீன் நுகர்வு, ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் தினசரி குடிப்பதால், பீர்  பல கடுமையான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். அதிக பீர் ஏற்படுத்தும் ஆபத்துகளில் சில இவை... 

எடை அதிகரிப்பு
பீரில் கலோரிகள் அதிகம் உள்ளன. தொடர்ந்து பீர் அருந்துவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். தொடர்ந்து பீர் குடிப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவதை கவனித்திருக்கலாம். அதை, ‘பீர் தொந்தி’ என்று செல்லமாக அழைப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

மேலும் படிக்க | காவு வாங்கிய பேலியோ டயட்?... நடிகர் பரத் கல்யாண் மனைவி மரணம்

நீரிழிவு நோயை உருவாக்கும் ஆபத்து
அதிகப்படியான பீர் குடிப்பவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு நோயின் அபாயம் அதிகமாகும்.
 
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாக இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் சில குறிப்பிட்ட வகையான உணவுகள் அல்லது பானங்கள் தொடர்ந்து உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும். இது ஒரு நல்ல அறிகுறி அல்ல மற்றும் பக்கவாதம் அல்லது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.  
 
ஆயுளைக் குறைக்கும் பீர்
ஆல்கஹால் உங்கள் ஆயுளைக் குறைக்கும் என்பது வெறும் வாய் வார்த்தையல்ல, இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆல்கஹால் அதிகம் உள்ள மதுபானத்தை குடிக்காவிட்டாலும், அதிக அளவில் பீர் குடிப்பது ஆரோக்கியத்தில் அதே தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

மேலும் படிக்க | சுத்த சைவ உணவு உண்பதை ஊக்குவிக்கும் ’வீகன் டயட்’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News