உச்சகட்டத்தில் காற்றுமாசு! நுரையீரலை பாதுக்காக்க இந்த டயட் நல்லது

Air pollution Diet: காற்று மாசுபாட்டைத் தவிர்க்க, உணவில் ஊட்டச்சத்து நிறைந்த சில பொருட்களைச் சேர்க்க வேண்டும். அவை இவை தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 4, 2022, 01:59 PM IST
  • காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ளது
  • இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு
  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துங்கள்
உச்சகட்டத்தில் காற்றுமாசு! நுரையீரலை பாதுக்காக்க இந்த டயட் நல்லது title=

புதுடெல்லி: மாசுபாடு அதிகரித்து உள்ள இந்த நிலையில், தற்போது காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும், வட மாநிலங்களில் இந்த பருவத்தில் காற்று மாசு உச்சபட்சத்தில் இருக்கிறது. டெல்லியில், AQI தொடர்ந்து 400க்கு மேல் உள்ளது, ஒரு பக்கம் கொரோனா மற்றும் மறுபுறம் மாசுபாடு மக்களைத் துன்புறுத்தியுள்ளது. நாம், நமது ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும், நச்சுக் காற்றைத் தவிர்க்கவும், சில உணவுகளை தவிர்ப்பதும், சில உணவுகளை கட்டாயம் உண்பதும் அவசியமாகிறது.

நமது நுரையீரலை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். அதற்குக் எந்த விதமான டயட் ஏற்றதாக இருக்கும்? என்பதைத் தெரிந்து பயன்படுத்துவது அவசியம். காற்று மாசுபாட்டைத் தவிர்க்க, உணவில் ஊட்டச்சத்து நிறைந்த சில பொருட்களைச் சேர்க்க வேண்டும். உணவு அட்டவணை இது. 

சுவாசிக்கும் காற்று விஷமாகிறது, அதிகரித்து வரும் மாசுபாடு அனைவருக்கும் ஒரு புதிய பிரச்சனையாக மாறியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் ஏற்படும் மாசு உங்கள் நுரையீரலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். மாசுபாடு சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா மற்றும் புற்றுநோய் கூட ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்கும் உணவுப் பட்டியல் இது.

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு 

மிளகு மற்றும் இஞ்சி

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் நம் உடல் அனைத்து நோய்களையும் தவிர்க்கலாம். இஞ்சி சாறு மற்றும் கருப்பு மிளகு தூள் கலந்து உட்கொள்வது உடலின் உள் உறுப்புகளை வலுவடையச் செய்கிறது. இஞ்சியை தேனுடன் அல்லது குக்ருமிளகாயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நுரையீரல் தொடர்பான பிரச்சனை தீரும்.

வைட்டமின் சி எடுத்துக் கொள்ளுங்கள்

வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி சாப்பிடுங்கள். புளிப்பு உள்ள காய்கறிகளை சாப்பிடுங்கள். தக்காளியையும் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

வெல்லம் மற்றும் உளுந்து

இனிப்பு வெல்லத்தில் ஆரோக்கியம் அதிகமாக உள்ளது.  பொக்கிஷங்கள் நிறைந்தது. வெல்லம் மற்றும் உளுந்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, தினமும் காலையில் வெல்லம் சாப்பிடுவதால் உள்ளிருந்து வலிமை கிடைக்கும்.

சோர்வு, பலவீனம், இரத்த பற்றாக்குறை என அனைத்து பிரச்சனைகளை நீங்கும். வெல்லத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இதன் காரணமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது, இது நுரையீரல் பிரச்சனையை நீக்கி அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.

 

சூப் மற்றும் மோர் குடிக்கவும்

சூப் மற்றும் மோர் அருந்துவதும் மிகவும் ஆரோக்கியமானது, அதனுடன் உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும்.

தண்ணீர் 

மாசு ஏற்படாமல் இருக்க, உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, நீரின் அளவை சரியாக வைத்துக்கொள்வதால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

பூண்டு, மஞ்சள் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.  

மேலும் படிக்க | கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News