ரசாயனப் பொருட்களே இல்லாத ஆர்கானிக் ஹேர் டை! நரைமுடி போயே போச்சு

Coconut shell Hair Dye: கொட்டாங்கச்சி மூலம் உங்கள் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக மாற்றலாம், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத சூப்பர் ஹேர் டை...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2023, 01:04 PM IST
  • நிமிடங்களில் நரைமுடியை கருப்பாக்கும் இயற்கை ஹேர் டை!
  • கொட்டாங்கச்சி தலைச்சாயம்
  • பக்கவிளைவுகள் இல்லாத ஹேர் டை...
ரசாயனப் பொருட்களே இல்லாத ஆர்கானிக் ஹேர் டை! நரைமுடி போயே போச்சு title=

தேங்காய்த் கொட்டாங்கச்சி கொண்டு நிமிடங்களில் வெள்ளை முடியை கருப்பாக்கினால், மார்க்கெட் சாயத்தை விட பல மடங்கு பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு அதிலும் குறிப்பாக தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை கொடுக்கும் தேங்காய், ஹேர் டை செய்யவும் பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? வீட்டிலேயே சுலபமாக செய்து பயன்படுத்தப்படும் இந்த தலைச்சாயத்தை பயன்படுத்தினால் ஆரோக்கியம் கெடாது, பக்கவிளைவுகள் ஏதும் கிடையாது.  
 
தேங்காய் சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காஐ நேரடியாக பல உணவுகளில் பயன்படுத்துகிறோம். தேங்காய் பால் மற்றும் இளநீர் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சருமத்தில் பளபளப்பையும் ஏற்படுத்துகிறது. கிராமப்புறங்களில் தேங்காய் மட்டையிலிருந்து கயிறும் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தேங்காயின் ஓடு, அதாவது கொட்டாங்கச்சியை பயன்படுத்தியிருகிறீர்களா?

தேங்காய் ஓட்டை, அதாவது கொட்டாங்கச்சியை சேகரித்து வைக்கும் வழக்கம் கிராமங்களில் உண்டு. அதை வீடுகளில் அடுப்பில் போட்டு எரிபொருளாக பயன்படுத்துவார்கள். ஆனால் அழகை மேம்படுத்தும் பொருட்களில், ஹேர் டையில் கொட்டாங்கச்சி பயன்படுத்தப்படுவது பலருக்கு தெரியாது.

கொட்டாங்கச்சியில் தயாரிக்கும் ஹேர் டை, உங்கள் தலைமுடியை உடனடியாக கருப்பு நிறமாக மாற்றுகிறது, ரசாயனப் பொருட்களே சேர்க்காத ஆர்கானிக் ஹேர் டை வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

முடியை கருமையாக்க பயன்படும் தேங்காய்
தேங்காயை பயன்படுத்திய பிறகு அதன் ஓட்டை, அதாவது கொட்டாங்கச்சியை கொண்டு முடி கருமையாக மாற்ற முதலில், தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்குங்கள். பதாம் மற்றும் கற்பூரத்தை பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த பொடிகளை ஒன்றாக சேர்த்து, அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது இயற்கையான எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாத தலைச்சாயம் தயார்.

தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் நரை முடியின் பகுதியில் தடவவும். சுமார் 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகு, ஷாம்பூவைக் கொண்டுதலைமுடியைக் அலசவும். இந்த இயற்கையான ஹேர் டை, உங்கள் தலைமுடியை உடனடியாக கருப்பாக மாற்றும். கற்பூரம் அல்லது பாதாம் சேர்ப்பது உங்களுடைய விருப்பம் தான். ஏனென்றால், கொட்டாங்கச்சியின் சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்ந்தாலே அது நரைமுடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும்.

பாதாம் மற்றும் கற்பூரம் ஆகியவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் எண்ணெய்க்கு இயற்கை நறுமணத்தைக் கொடுப்பதற்காக என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். கொட்டாங்கச்சி மூலம் உங்கள் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக மாற்றலாம். இருப்பினும், சிறு வயதிலேயே உங்களுக்கு நரைமுடி தோன்றினால், அத்தகைய சூழ்நிலையில், நிச்சயமாக உங்கள் நிபுணரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News