கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; காங்., உடன் பாஜக...

 

Last Updated : Nov 11, 2019, 01:59 PM IST
  • முன்னாள் பாரதீய ஜனதா MLA-க்கள் இருவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்துள்ளனர்.
  • காங்கிரஸ் தலைவரை சந்தித்த பாஜகவின் முன்னாள் MLA-க்கள் இருவரும் 2018 தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் ஆவர்.
  • இரு பாஜக MLA-க்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்; காங்., உடன் பாஜக... title=

 

கர்நாடகா அரசியலில் புது திருப்பமாக, முன்னாள் பாரதீய ஜனதா MLA-க்கள் இருவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவரை சந்தித்த பாஜகவின் முன்னாள் MLA-க்கள் இருவரும் 2018 தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் ஆவர். 

கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி பாஜக தலைவர் ராஜு ககீ (காக்வாட் MLA) மற்றும் அசோக் புஜாரி (கோகாக்கைச் MLA) ஆகியோர் காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரை பெங்களூரில் திங்கள்கிழமை சந்தித்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், குறித்த இரு பாஜக MLA-க்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருப்பினும், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் MLA-க்களுக்கு டிக்கெட் தருவதாக வாக்குறுதி அளித்தாரா இல்லையா? என்பது குறித்த தகவல் உறுதிப் படுத்தப்படவில்லை. 

குறிப்பிடத்தக்க வகையில், கர்நாடக சட்டசபையின் 15 இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடக இடைத்தேர்தல் குறித்த தேதியினை கர்நாடக தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அதன்படி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைப்பெறும்., தேர்தல் முடிவுகள் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மாநிலத்தில் தேர்தல் விதிமுறைகள் இன்று (நவம்பர் 11) முதல் நடைமுறைக்கு வந்தது. 

முந்தைய கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக ஜூலை மாதம் தங்கள் சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜனதா தளம்-மதச்சார்பற்ற (JDS) மூன்று கிளர்ச்சி MLA-க்கள் காரணமாக இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News