Gujarat Election 2022 Updates: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் காலை 11 மணி நிலவரப்படி 11.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டு கட்டங்களாக நடைபெறும் குஜராத் சட்டசபை தேர்தலில் புதிய அரசு அமைய மக்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். முதற்கட்டமாக 89 இடங்களுக்கு 2 கோடியே 13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் முயற்சியில் உள்ளது. தனது ஆட்சிக்கோட்டையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும் தீவிரமாக உள்ளது. பஞ்சாபில் வெற்றி பெற்ற பிறகு, உற்சாகத்தில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் குஜராத்தில் கால் பதிக்க பிரம்ம பிரயத்தனங்கள் செய்கிறது.
மேலும் படிக்க | யாருக்கு முடிவுரை? குஜராத் முதல் கட்ட வாக்குபதிவு
அத்துடன் சுயேட்சைகள், வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி அரசியல்வாதிகளின் சுயேட்சையான போட்டி என இந்தத் தேர்தல் பல முனை போட்டிகளாக விரிந்தாலும், குஜராத் சட்டசபைத் தேர்தல் மும்முனைப் போட்டி களமாக உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி முதல் கட்ட தேர்தலுக்கு 25,430 வாக்குச் சாவடிகளை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 16,416 கிராமப்புறங்களிலும், 9,014 நகர்ப்புறங்களிலும் உள்ளன.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தில் காலை 11 மணி நிலவரப்படி 11.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலைய்ல் ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
"சிறு குழந்தையை அடிக்கும் அளவுக்கு கீழே குனிந்து விடாதீர்கள்" என்று தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும்போது ஆம் ஆத்மியின் குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா சாடியுள்ளார். கதிர்காம் ஏசியில் வேண்டுமென்றே மெதுவாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
Gujarat | Mandhatasinh Jadej Thakor Saheb and Kadambari Devi - members of the erstwhile royal family in Rajkot cast their votes today in the first phase of #GujaratElection2022
They arrived at the polling station in a vintage car. pic.twitter.com/o2XRv60zCr
— ANI (@ANI) December 1, 2022
பாஜக குண்டர்களின் அழுத்தத்தில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்றால், நீங்கள் ஏன் தேர்தலை நடத்துகிறீர்கள்? மாநிலம் முழுவதும் சராசரியாக 3.5% வாக்குகள் பதிவாகியுள்ளது, ஆனால் கதிர்காமத்தில் 1.41% மட்டுமே பதிவாகியுள்ளது. ஒரு சிறு குழந்தை கூட்ட கேள்வி கேட்கும் அளவுக்கு கீழே குனிந்து விடாதீர்கள் என்று கோபால் இத்தாலியா ட்வீட் செய்துள்ளார்.
குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் ராஜ்கோட்டில் உள்ள முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த மந்ததாசிங் ஜடேஜ் தாக்கூர் சாஹேப் மற்றும் காதம்பரி தேவி ஆகியோர் வாக்களிக்க விண்டேஜ் காரில் வந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ