மாநில அரசுப் பணியில் இணைய விருப்பமா? மக்களுக்கு சேவை செய்ய 833 பேருக்கு வாய்ப்பு

TSPSC RECRUITMENT 2022: உதவிப் பொறியாளர், ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி மற்றும் இதர பணிகளுக்கான 833 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2022, 06:56 PM IST
  • தெலுங்கானா மாநில அரசுப் பணியில் இணைய விருப்பமா?
  • 833 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம்
  • மாநில அரசுப் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
மாநில அரசுப் பணியில் இணைய விருப்பமா? மக்களுக்கு சேவை செய்ய 833 பேருக்கு வாய்ப்பு title=

ஹைதிராபாத்: உதவிப் பொறியாளர், ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி மற்றும் இதர பணிகளுக்கான 833 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநில பொது சேவை ஆணையம் (TSPSC) இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடைமுறைக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 28 முதல் அனுப்பலாம். இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த வேலையில் சேர தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 21 வரை தெலுங்கானா மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tspsc.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க |  இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு! விவரம் உள்ளே

TSPSC ஆட்சேர்ப்பு 2022 வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 44 வயதுக்குள் இருக்க வேண்டும்.

TSPSC ஆட்சேர்ப்பு 2022 காலியிட விவரங்கள்: இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மொத்தம் 833 காலியிடங்களை நிரப்பப்படும்.

இதில் 434 காலியிடங்கள் பல்வேறு துறைகளில் உள்ள உதவி பொறியாளர் பணிக்கும், 399 காலியிடங்கள் பல்வேறு பொறியியல் சேவைகளில் ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி பணிக்களுக்கும் ஆனவை என்று இந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 

TSPSC ஆட்சேர்ப்பு 2022: எப்படி விண்ணப்பிப்பது

விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 21 வரை www.tspsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் TSPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்டு ஒரு முறை பதிவு (OTR) இல் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு இந்த ஓடிபி அனுப்பப்படும்.

மேலும் படிக்க | விமானநிலையத்தில் பணி புரிய ஆவலா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News