COVID-19 எதிரொலி; UG மற்றும் PG தேர்வுகள் ரத்து ஆக வாய்ப்பு...

ஆந்திரா பிரதாசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் UG மற்றும் PG மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது குறித்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளது.

Last Updated : Jun 24, 2020, 09:16 AM IST
  • பட்டப்படிப்பு(UG) மற்றும் முதுகலை(PG) படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் கோரியுள்ளார்.
  • எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பவர் மாநில் முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
COVID-19 எதிரொலி; UG மற்றும் PG தேர்வுகள் ரத்து ஆக வாய்ப்பு... title=

ஆந்திரா பிரதாசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் UG மற்றும் PG மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது குறித்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளது.

மாநிலத்தில், பட்டப்படிப்பு(UG) மற்றும் முதுகலை(PG) படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செவ்வாய்க்கிழமை கோரியுள்ளார்.

READ | திருப்பதி கோவில் எப்போது திறக்கப்படும்; தீவிர ஆலோசனையில் TTD நிர்வாகம்...

உயர்கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட வீடியோ மாநாட்டில் அமைச்சரின் கோரிக்கை இடம்பெற்றுள்ளது. பல்வேறு பிரிவுகளால் இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் நன்மை தீமைகளை குறித்து ஆலோசித்தப் பின்னர், இதுதொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த விவகாரம் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பவர் மாநில முதல்வர் YS ஜெகன் மோகன் ரெட்டி தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 தொற்று அதிகரிப்பால் ஏற்கனவே மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மற்றும் இடைநிலை துணைத் தேர்வுகளை அரசாங்கம் ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் அறிவிப்பை அறிவிக்க காத்திருக்கும் இந்த கூட்டத்தில் அரசாங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் PV ரமேஷ், சிறப்பு தலைமைச் செயலாளர் சதீஷ் சந்திரா, ஆந்திர மாநில உயர்கல்வி கவுன்சில் தலைவர் ஹேமச்சந்திர ரெட்டி, கல்லூரிக் கல்வி ஆணையர் MM நாயக் மற்றும் பலர் பங்கேற்றனர்.

READ | உள்நாட்டு விமான சேவையை தொடங்கிய ஆந்திரா.... கட்டுப்பாடுகள் என்னென்ன..

இதனிடையே தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு PG மற்றும் பிற பட்ட தேர்வுகளையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பான ஒரு அறிக்கையில் பவன் கல்யாண், தேர்வுகளை நடத்துவதற்கும், மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை வைத்திருப்பதற்கும் நிலைமை தெளிவாக இல்லை, பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல் அனைத்து தேர்வுகளையும் அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Trending News