துப்பறிவாளர் கதாப்பாத்திரங்களில் வெளியாகிய படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் படங்கள். இப்படத்தின் அடுத்தப் பாகத்தில் மீண்டும் டேனியல் கிரெய்க் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு கிரெய்க்-க்கு சம்பளமாக 450 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) கொடுக்கப்படுள்ளதாக தெரிகிறது.
உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் கடந்த 3 ஆண்டுகளாக வெளியாகவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு டேனியல் கிரெய்க் நடிப்பில் வெளியான ஸ்பெக்ட்ரா, ஜேம்ஸ் பாண்ட் பட வரிசைகளில் இறுதியாக வந்த படமாகும்.
இந்த படத்திற்கு பின்னர், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என டேனியல் கிரெய்க் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் 50 வயதாகும் கிரெய்க் தான் அடுத்த படத்திலும் நடிப்பார் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வு ட்விட்டர் பக்கதில் படக்குழுவினர் பதிவிட்டுள்ளதாவது...
We’ve been expecting you… #Bond25, Daniel Craig’s 5th outing as 007, will be directed by Academy Award-winning Danny Boyle from an original screenplay by John Hodge. Production is set to begin on 3 Dec 2018. MGM will partner with Universal Pictures to release the film worldwide pic.twitter.com/h8fVhyYhyY
— James Bond (@007) May 25, 2018
டேனி போயல் இயக்கத்தில் 5-வது முறையாக ஜேம்ஸ் வேடத்தில் நடிக்க கிரெய்க் ஒப்புக் கொண்டுள்ளார். Bond 25 என்ற இப்படம் அடுத்தாண்டு அக்டோபரில் திரைக்கு வரம், இப்படத்திற்கான படப்பிடிப்புகளை வரும் டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கை ஃபால் மற்றும் ஸ்பெக்ட்ரா உள்ளிட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய் நடித்துள்ளார்.