மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ தொழில்களை செய்யுங்கள்..

Business Ideas Tamil: ஒரு சில வணிக ஐடியாக்கள் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை ஈட்ட உதவும். அது போன்ற ஒரு யோசனையை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 29, 2024, 07:43 PM IST
  • மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்க டிப்ஸ்
  • என்னென்ன தொழில்களை செய்யலாம்?
  • முழு வணிக யோசனைகள் இதோ!
மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ தொழில்களை செய்யுங்கள்.. title=

Business Ideas Tamil : இன்றைய இளம் தலைமுறையினர் பலர்,அலுவலகங்களுக்கு சென்று வேலை செய்வதை விரும்புவதில்லை. மாறாக, பலர் சுய தாெழில் தொடங்குவதையே பெரிதும் விரும்புகிறார்கள். தலைமையில் இருப்பவர்களிடம் சம்பளத்தை எதிர்பார்த்து நிற்க கூடாது எனும் பலரின் எண்ணமே, இதற்கு காரணமாக இருக்கிறது. இதில் இருந்து வரும் லாபம், அவர்களின் வேலையில் இருந்து வரும் சம்பளத்தை விட பன்மடங்கு அதிகமாக உள்ளதாக பலர் கருதுகின்றனர். 

அப்படி பலர் தொடங்கும் சிறு,குறு தொழில்களும் பின்னாளில் வளர்ந்து அவர்களை பெரிய முதலாளிகளாக மாற்றுகிறது. இதனால், பன்மடங்கு வருமானம் பெற்று பலர் பயன்பெறுகின்றனர். மாதம், ரூ.1 லட்சம் வருமானம் கொடுக்கும் தொழில்கள் யாவை என்பதை பார்ப்போமா? 

மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் தரும் தொழில்கள்:

ஸ்டாக் மார்கெட்டில் முதலீடு செய்வது:

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது ஒரு பிரபலமான முதலீட்டு உத்தியாகும். இதை திறம்பட செய்தால், அது உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்க உதவும். எதுவாக இருப்பினும் இதில் உள்ள நிதி இழப்பு அபாயங்கள் குறித்து நினைவில் கொள்ள வேண்டும். எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன்னரும் நன்றாக அந்த நிறுவனம் குறித்தும், அந்த நிறுவனத்தின் ஸ்டாக்ஸ் குறித்தும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். 1 லட்ச ரூபாயை முதலீடு செய்வதற்கு முன்னர், சில ஆயிரங்களை முதலீடு செய்து பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | மிஸ் பண்ணிடாதீங்க.. இந்த திட்டத்தில் முதலீடு செய்து 18 லட்சம் பெறுங்கள், அசத்தும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்

ஈ-காமர்ஸ்:

ஈ-காமர்ஸ் தளம், தற்போது பலருக்கு நல்ல வணிகமாக இருந்து வருகிறது. இந்த தொழிலை ஆரம்பித்தால் பிறர் வாங்க நினைக்கும் பொருட்களுக்கான ஆர்டர் உங்களிடம் கிடைக்கும், அந்த ஆர்டரை ஷிப்பிங்கிற்காக ஆர்டரை சப்ளையருக்கு அனுப்புவீர்கள். அமேசான், ஷாப்பிஃபை உள்ளிட்ட தளங்கள் இதை செய்ய வணிகர்களுக்கு வழிவிடுகிறது. இதில் நன்கு வளர ஆரம்பித்தால், மாதம் 1 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். 

ப்ளாக் எழுத்தாளர்:

இந்த தொழிலை தேர்வு செய்தால் மாதம் 10 ஆயிரத்தில் இருந்து 1. 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். Wordpress, wix, medium, blogger உள்ளிட்ட தளங்கள் இதற்கான இணையதளங்களாக செயல்படுகின்றன. இதை ஆரம்பிப்பதற்கு ரூ.150 முதல் 6,000 வரை ஆகலாம்(மாதா மாதம்).  நீங்கள் தேர்வு செய்யும் ப்ளானை வைத்து இந்த தொகை மாறுபடும்.

சோஷியல் மீடியா மேனேஜர்:

முன்னணி நிறுவனங்கள் பல, சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்கின்றன. அதற்காக, சமூக ஊடகங்களை மேம்படுத்துவதற்காக ஒரு மேனேஜரையும் நியமிக்கின்றன. அதிலும், விளம்பர துறை சார்ந்த நிறுவனங்கள், இதில் முன்னோடிகளாக இருக்கின்றன. இதில் சேர விரும்பினால் பகுதி நேரமாகவோ, இண்டெர்ன்ஷிப்போ சேர்ந்து கொண்டு, இது குறித்த திறன்களை நன்றாக கற்றுக்கொள்ளலாம். பின்பு, வீட்டில் மடிக்கணினி அல்லது கணினி இருப்பின், அதன் மூலமாகவே ஃப்ரீலேன்சிங் வகையில் பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் படிக்க | ‘இந்த’ தொழில்களை செய்தால்..கல்லூரி மாணவர்களும் கை நிறைய சம்பாதிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News