Union Bank of India: நிலையான வைப்புக் கணக்குக்கு 8% வரை வட்டி கொடுக்கும் வங்கி!

FD Rates Of Union Bank of India:  உத்தரவாதமான வருமானம் தரும் பாதுகாப்பான சேமிப்பு என்றால், அது வங்கிகளின் நிலையான வைப்புக் கணக்கில் வைக்கப்படும் பணம் தான் என்பது பலரின் நம்பிக்கை...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2024, 08:59 PM IST
  • அதிக வட்டி தரும் யூனியன் பேங்க் ஆஃப் இண்டியா!
  • எஃப்டி கணக்கின் வட்டி உயர்ந்தது
  • யாருக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?
Union Bank of India: நிலையான வைப்புக் கணக்குக்கு 8% வரை வட்டி கொடுக்கும் வங்கி! title=

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்த விகிதங்கள் ரூ. 2 கோடி வரையிலான எஃப்டிகளுக்குத் திருத்தப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதங்கள் இன்று (ஜூன் 1, 2024) முதல் அமலுக்கு வந்தன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் எஃப்டி வைப்புத்தொகைகளுக்கு 3.5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையில் வட்டி கொடுக்கப்படுகிறது.

நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை அளிக்கிறது. வங்கிகள், தபால் அலுவலகம் அல்லது NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என எங்கு வேண்டுமானாலும் FD திட்டத்தில் டெபாசிட் (Investment Tips) செய்யலாம்.

தற்போது சில பெரிய வங்கிகள் மிகவும் கவர்ச்சிகரமான வட்டிகளை வழங்குகின்றன. அதிலும் மூத்த குடிமக்களுக்கு வழக்கத்தை விட அதிக வட்டி கிடைக்கும். அந்த வகையில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதிகபட்சமாக 8 சதவிகிதம் வரை தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கி வழங்குகிறது. 

மேலும் படிக்க | SIP: பரஸ்பர நிதியத்தில் முதலீடு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!

வட்டி விகிதங்கள்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வட்டி விகிதங்கள் எவ்வளவு நாட்கள் என்பதன் அடிப்படையில் மாறுபடுகிறது. அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்.

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 3.5 சதவீத வட்டி

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான FDக்கு 4.5 சதவீத வட்டி

91 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு நிலையான வைப்புக் கணக்குக்கு 4.8 சதவிகித வட்டி

181 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான FDக்கு 6.25 சதவீத வட்டி 

1 வருடம் முதல் 398 நாட்கள் வரையிலான FDகளுக்கு 6.75 சதவீத வட்டி

399 நாட்களுக்கு செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்குஅதிகபட்சமாக 7.25 சதவீத வட்டி

400 நாட்கள் முதல் 998 நாட்கள் வரை FD செய்பவர்களுக்கு 6.50 சதவீதம் வட்டி

999 நாட்களுக்கு FDக்கு 6.40 சதவீத வட்டி

1000 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 6.50 சதவீத வட்டி

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் ‘இவை’ தான்..!!

சீனியர் சிட்டிசன்களின் டெபாசிட்களுக்கான வட்டி

 

யூனியன் பேங்க் ஆஃப் இண்டியாவில் வைப்புத் தொகை வைப்பவர் மூத்த குடிமகனாக இருந்தால்,  0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும். அதன் அடிப்படையில் பார்த்தால், மூத்த குடிமக்கள் 399 நாட்களுக்கு FD மீது அதிகபட்சமாக 7.75 சதவீத வட்டி கிடைக்கும்.

சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு 0.75 சதவீதம் வரை கூடுதல் வட்டி கிடைக்கும். சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 399 நாட்களுக்கான FDக்கு அதிகபட்சமாக 8 சதவீத வட்டியை யூனியன் பேங்க் ஆஃப் இண்டியா கொடுக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 7.3 சதவீத வட்டியை வழங்கும் நிலையில் யூனியன் பாங்க் ஆஃப் இண்டியாவின் வட்டி விகிதம் அதிகமானதாக இருக்கிறது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News