Small Scale Business Ideas For Men In Tamil : சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பெரும்பாலான இந்திய இளைஞர்கள் “ஒரு நல்ல வேலைக்கு சென்றால் போதும்” என்ற எண்ணத்தை கொண்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கிடையே மேலோங்கி உள்ளது. தானே சுயமாக தொழில் தொடங்கும் முயற்சியிலும் பல இளைஞர்கள் இறங்கியிருக்கின்றனர். இவர்கள் ஆரம்பிக்கும் தொழிலும் இவர்களுக்கு நிலையான வருமானத்தை கொடுப்பதாக இருக்கிறது. ஒரு சிலர், கையில் குறுகிய சேமிப்பை கையில் வைத்திருந்தாலும் அதை ஏதேனும் சிறு தொழிலில் முதலீடு செய்து தங்களது வருமானத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக்கி கொள்கின்றனர். அப்படி, ஆண்களுக்கு லாபத்தை கொடுக்க கூடிய சிறு தொழில் யோசனைகளை இங்கு பார்ப்போம்.
கிராஃபிக் டிசைனிங்:
பலர், தங்களிடம் இருக்கும் திறனை வைத்தே அதனை முதலீடாக கொண்டு தொழிலை தொடங்குகின்றனர். அப்படி தொடங்க கூடிய தொழில்களுள் ஒன்று, கிராஃபிக் டிசைனிங். ஒரு நிறுவனத்திற்கு லோகோவை தயார் செய்து தருவதில் இருந்து, ஒரு படத்திற்கு காட்சிகளை எடிட் செய்து தருவது வரை கிராஃபிக் டிசைனிங்கிற்கு மார்கெட் பெரிதாக உள்ளது. எனவே, இந்த தொழிலை சிறிய முதலீட்டை வைத்து ஆரம்பித்தால் பல லட்சங்களை வருமானம் ஆக பார்க்கலாம்.
சலூன் கடை:
“என்னது சலூன் கடையா?” என்று நக்கலாக சிரிக்க வேண்டாம். தற்போது ஹேர் ஸ்டைலிஸ்டாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று தெரியுமா? சிகை அலங்காரத்தை கற்றுக்கொடுப்பதற்கென்றே தனியாக தற்போது கோச்சிங் செண்டர்கள் எல்லாம் வர ஆரம்பித்து விட்டன. அப்படி கற்றுக்கொண்டு பெரிய பெரிய ஹேர் ஸ்டைல் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், தற்போது பல லட்சங்களை கையில் பார்க்கின்றனர். இதை 3 அல்லது 4 மாதத்தில் கற்றுக்கொடுக்கவும் சில நிறுவனங்கள் இயங்குகின்றன. அதன் மூலம் இந்த சிகை அலங்கார கலையை கற்றுக்கொண்டால், சலூன் கடையை வைத்துவிட்டு செட்டில் ஆகி விடலாம்.
மேலும் படிக்க | பெண்களுக்கு கைநிறைய வருமானத்தை அள்ளித்தரும் சிறு தொழில்கள்! என்னென்ன தெரியுமா?
கேட்டரிங்:
“சமையல் எல்லாம் பெண்களுக்குரியது” என்ற பெருசுகளின் பழமொழிகள் எல்லாம் தற்போது பழைய மொழிகளாகிவிட்டன. அனைத்து கலையும், அனைவருக்கும் உரியது என்ற காலம் மாறிவிட்டது. எனவே, கேட்டரிங் தொழிலையும் தாராளமாக யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். சரியான வாடிக்கையாளர்கள் கிடைத்துவிட்டால் அவர்களிடம் இருந்து கிடைக்கும் நற்பெயராலேயே இந்த தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்து விடும். இது போக, எப்போது, எவ்வளவு சிரிதாக ஆரம்பித்தாலும் தொய்வே இல்லாத ஒரு தொழில், உணவு தொழிலாகும். எனவே, இதை ஆரம்பித்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
பயிற்சி கொடுப்பவர்:
உங்களுக்கு மிகவும் தெரிந்த, நீங்கள் மிகவும் அறிந்த ஒரு துறை அல்லது கலை குறித்து ஆன்லைனிலேயே சொல்லிக்கொடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் அறிவை வைத்தே சம்பாதிக்க கூடிய சிறு தொழில்களுள், இதுவும் ஒன்று. இரு மொழி பேசுபவராக இருந்தால் நீங்கள் மொழி பெயர்பாளராகவும் செயல்படலாம். ஆன்லைனில் வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் உங்களுக்கு தெரிந்த திறனை சொல்லிக்கொடுக்கலாம். இதற்காக பிரத்யேக இணையதளங்கள் சில இயங்குகின்றன. அவற்றை தொடர்பு கொண்டு இந்த தாெழிலை தொடங்குவது நன்று.
(பொறுப்பு துறப்பு: தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக துறை சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 20 ரூபாய் நோட்டு இருந்தா..நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி! எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ