சென்னை: கலாநிதி மாறன், பிரபல தொழிலதிபர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சன் டிவி கலாநிதி மாறன், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் உறவினர் மற்றும், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகனும் ஆவார். ஐபிஎல் அணியின் உரிமையாளரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கலாநிதி மாறன் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வணிக நிர்வாகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சொத்துமதிப்பு திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஊடகத் துறையில் முன்னணி நிறுவனமாகவும், தென்னிந்திய தொலைகாட்சிகளில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக இருக்கும் சன் டிவி பங்குகள் கடந்த 3 மாதத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் சன் டிவி உரிமையாளரான கலாநிதி மாறன் சொத்து மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
சன் டிவி பங்குகள், சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருவதால், சந்தையில் கலாநிதி மாறனின் நிறுவனத்தின் பங்கு கிராக்கியில் இருப்பதால், அதன் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 மாதத்தில் 40 சதவீத உயர்வு என்பது மிகப் பெரிய சாதனை என்றும் சொல்லலாம். அடுத்த 3-4 வாரத்தில் சன் டிவியின் பங்குகள் மேலும் அதிகரிக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | உங்களிடம் டிசிஎஸ் நிறுவன பங்குகள் இருக்கா? ஜாக்பாட் காத்திருக்கு ! TCS பைபேக் பாலிசி
இந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி 443 ரூபாயாக இருந்த சன் டிவி பங்கின் விலையானது, அக்டோபர் 5 ஆம் தேதி 634 ரூபாய் என உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் சன் டிவி பங்குகள் 1.07 சதவீதம் உயர்ந்து 617.05 ரூபாயாக உள்ளது. வெறும் 5 ரூபாய் என்ற முகமதிப்பில் வெளியிடப்பட்ட சன் டிவி பங்குகள் சுமார் 24,315.02 கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.
சன் டிவி பங்கில், ஏறக்குறைய 75 சதவீத பங்குகளை நிறுவனத்தின் நிறுவனர்கள் வைத்திருப்பதால், கலாநிதி மாறன் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு உச்சத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையில், இன்று, சன் டிவி குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 2.9 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 1031 இடத்தில் கலாநிதி மாறன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990ல் கலாநிதி மாறன் பூமாலை என்ற தமிழ் மாத இதழைத் தொடங்கிய கலாநிதி மாறன், பிறகு சன் டிவி என்ற தொலைகாட்சி சேனலை உருவாக்கினார். 1993ல் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கியதில் இருந்து அவர் தொழில் ஏறுமுகத்தில் தான் சென்றுக் கொண்டிருகிறது.
பங்கு மூலதனத்தின் 10 சதவீதத்திற்காக 133 மில்லியன் அமெரிக்க டாலர்களை (INR 1,100 கோடி தோராயமாக) திரட்டிய சன் நெட்வர்க்,, 2006 ஆம் ஆண்டில் பம்பாய் பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டது. அந்தப் பயணம் இன்று பங்கு ஒன்று 617.05 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க - 5000 ராக்கெட்டுகள் தாக்குதல்.. 200 பேர் பலி; போரை அறிவித்த இஸ்ரேல் - அடுத்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ