எலக்ட்ரிக் வாகனத்திற்கு அதிரடி லோன் ஆபர்களை வழங்கும் வங்கி!

பசுமை கார் கடன் திட்டத்தின் மூலம் எஸ்பிஐ வங்கியானது 7.25% முதல் 7.60% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 21, 2022, 06:59 PM IST
  • எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 7.25% முதல் கடன்களை வழங்கும் எஸ்பிஐ.
  • அதிகளவு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வைக்க நடவடிக்கை.
  • 2030-குள் 100% மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த இலக்கு.
எலக்ட்ரிக் வாகனத்திற்கு அதிரடி லோன் ஆபர்களை வழங்கும் வங்கி! title=

மக்களை அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வைக்க இந்தியா முயற்சி செய்து வருகிறது, 2030ம் ஆண்டுக்குள் 100% மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தியா இலக்காக கொண்டுள்ளது.  எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு வங்கிகள் பலவிதமான கடன் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை அதிகரிக்க பசுமை கார் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதுகுறித்து எஸ்பிஐ அதன் ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | NPS vs PPF: அதிக வருமானம் அளிக்கும் திட்டம் எது? நிபுணர்களின் கருத்து இதோ

மே 15ம் தேதி முதல் எஸ்பிஐ ஆனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பசுமை கார் கடன் திட்டத்தின் மூலம் 7.25% முதல் 7.60% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.  தவணையை திருப்பி செலுத்தும் காலம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகப்பட்சம் 8 ஆண்டுகள் வரையும், 21 வயது முதல் 67 வயது உள்ளவர்கள் கடன் பெற தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.  சாதாரண கார் கடன்களுக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.  இதன் மார்ஜின் ஆன்-ரோடு விலையில் 90% வரை இருக்கும்.

எஸ்பிஐ எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மூன்று வகைகளில் கடன்களை வழங்குகிறது.  முதல் வகையில் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் வருமான அளவை வைத்துள்ளது.  இந்த வருமானத்திற்கு எதிராக எஸ்பிஐ மாத வருமானத்தின் 48 மடங்கு வரை கடனை வழங்குகிறது.  இரண்டாவது வகையில் எஸ்பிஐ அதிகபட்சமாக 4 மடங்கு நிகர லாபம் அல்லது ஐடிஆர் படி மொத்த வரிக்கு உட்பட்ட வருவாயை மீண்டும் தேய்மானம் மற்றும் தற்போதுள்ள அனைத்து கடன்களையும் திருப்பி செலுத்திய பிறகு வழங்குகிறது.  மூன்றாவது வகையில் ஆண்டு வருமானம் 4 லட்ச ரூபாயாக அமைக்கப்பட்டுள்ளது, இதன் நிகர ஆண்டு வருமானத்தின் 3 மடங்கு வரை அதிகபட்ச கடன் வழங்குகிறது.

மேலும் படிக்க | EPFO முக்கிய செய்தி: இதை செய்யவில்லை என்றால் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ள முடியாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News