2021-2022 நிதியாண்டில் பொதுத்துறை கடன் வழங்கும் நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கியானது வாடிக்கையாளர்களின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணங்கள் விதித்ததன் மூலம் ரூ.645 கோடிக்கும் மேல் சம்பாதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் மூலம் ரூ.645.67 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக வங்கி பதிலளித்துள்ளது.
மேலும் படிக்க | Bank Holidays: ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறை குறித்த முழு விபரம்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கடன் அளிக்கும் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதன் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு அல்லது காலாண்டு/மாதாந்திர இருப்பை சரியாக பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம் ரூ.239.09 கோடியை வசூலித்துள்ளது. 2020-2021ம் ஆண்டில், வாடிக்கையாளர்கள் அவர்களது சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை வைத்தவர்களிடம் விதிக்கப்பட்ட அபராதத்தின் மூலம் வங்கி ரூ.170 கோடி வசூல் செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இந்த நிதியாண்டில் இந்த மொத்த தொகையும் கிட்டத்தட்ட 8,518,953 கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மார்ச் 31, 2022 கணக்குப்படி, 67,637,918 ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் இருப்பதாக பஞ்சாப் நேஷ்னல் வங்கி தெரிவித்துள்ளது. 2018-2019ம் நிதியாண்டு முதல் 2021-2022 நிதியாண்டு வரை வங்கியில் உள்ள ஜீரோ பேலன்ஸ் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மார்ச் 31,2019ல் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளின் எண்ணிக்கை 28,203,379 ஆகவும், மார்ச் 31,2020ல் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளின் எண்ணிக்கை 30,583,184 ஆகவும், மார்ச் 31,2021ல் ஜீரோ பேலன்ஸ் கணக்குகளின் எண்ணிக்கை 59,496,731 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | சிறந்த வருமானம் தரும் போஸ்ட் ஆபிஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR