பொதுவாக யூபிஐ செயலியை நாம் பயன்படுத்த வேண்டுமானால் அதில் நாம் நம்முடைய டெபிட் கார்டை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். டெபிட் கார்டு மூலம் பெறப்படும் ஓடிபி அங்கீகாரத்திற்குப் பிறகுதான் நம்மால் இந்தச் சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது டெபிட் கார்டு அதாவது ஏடிஎம் கார்டு இல்லாமலும் நீங்கள் யுபிஐ செயலியை பயன்படுத்த முடியும். ஆன்லைன் பேமெண்ட் செயலியான போன்பே உங்களுக்கு ஆதார் அட்டை மூலம் யூபிஐ பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. இனிமேல் போன்பே பயன்படுத்தும் பயனர்கள் ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே ஆதார் அட்டை பயன்படுத்தி ஓடிபி அங்கீகாரம் மூலம் யூபிஐ செயலியை பயன்படுத்தலாம். இப்போது ஆதார் அட்டை எல்லா செயல்முறைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு விட்டது, நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை வங்கி கணக்கோடு இணைத்திருப்பீர்கள். எனவே டெபிட் கார்டுகள் இல்லாதவர்கள் ஆதார் அட்டையை மட்டுமே பயன்படுத்தி யூபிஐ மூலமாக எந்தவொரு ட்ரான்ஸாக்ஷன்களையும் செய்துகொள்ள முடியும்.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் யூபிஐ ஆனது, ஒரு நிகழ்நேர கட்டண முறையாகும். இந்த செயலியை நீங்கள் ஸ்மார்ட்போனில் பதிவு செய்து வைத்திருப்பதன் மூலம் உங்களது இரண்டு வங்கிக் கணக்குகளுக்கும் இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை செய்துகொள்ள முடியும். ஒரே மொபைலில் ஒரே ஒரு யூபிஐ கணக்கின் மூலமாக நீங்கள் பல வங்கிக் கணக்குகளை அணுகலாம். இது ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து மேற்பார்வையிடும் தேசிய கொடுப்பனவு கழகத்தால் உருவாக்கப்பட்டது. போன்பே செயலியில் ஆதார் அட்டை மூலம் சரிபார்க்க யூபிஐ பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) மற்றும் உங்கள் வங்கியிலிருந்து அனுப்பப்படும் ஓடிபி-ஐ பெறுவீர்கள். போன்பே செயலியை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் எந்தவொரு பயனருக்கும் யூபிஐ மூலமாக பணம் செலுத்தலாம்.
ஆதார் எண் மூலம் யூபிஐ செயலியை செயல்படுத்துதல்:
1) முதலில் உங்கள் மொபைலில் போன்பே செயலியை டவுன்லோடு செய்யவேண்டும்.
2) இப்போது உங்கள் தொலைபேசி எண் மற்றும் ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்.
3) பிறகு 'My Money' என்பதற்குச் சென்று 'Payment Methods' என்பதைக் கிளிக் செய்யவும்.
4) இப்போது 'புதிய வங்கிக் கணக்கைச் சேர்' என்பதைக் கிளிக் செய்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.
5) இப்போது உங்கள் மொபைல் எண் சரிபார்க்கப்படும்.
6) இங்கு யூபிஐ பின்னை உள்ளமைக்க இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
7) இதில் டெபிட்/ஏடிஎம் கார்டு அல்லது ஆதார் கார்டை நீங்கள் தேர்வு செய்யலாம்.
8) இப்போது ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை உள்ளிட்ட பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும்.
9) ஓடிபி-ஐ உள்ளிட்டதும் யூபிஐ பின் செயல்படுத்தப்படும், இப்போது நீங்கள் இதனை பயன்படுத்தலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ