Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்

Union Budget 2024: சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள், மத்திய அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் என பலருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2024, 11:25 AM IST
  • 80C விலக்கு வரம்புகளில் அதிகரிப்பு.
  • வருமான வரி விகிதங்கள்.
  • 8வது சம்பள கமிஷன்.
Budget 2024: அரசு ஊழியர்கள், சம்பள வர்க்கம், நடுத்தர மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் title=

Union Budget 2024: இந்த மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டாகும் இது. இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல துறைகளை சேர்ந்த பல அமைப்புகளும் நிதி அமைச்சரிடம் (Finanance Minister) தங்கள் கோரிக்கைகளை அளித்துள்ளன. 

சம்பள வர்க்கத்தினர், நடுத்தர வர்க்க மக்கள், மத்திய அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் என பலருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. வரி விலக்குகள், வரி அடுக்குகளில் மாற்றம் ஆகியவை முக்கிய கோரிக்கைகளாக உள்ளன். வருமான வரி வருவாயில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் சம்பள வர்க்கத்தினர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து (Nirmala Sitharaman) சாதகமான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

Budget 2024 Expectations:

இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பட்ட மக்களுக்கு உள்ள முக்கிய சில எதிர்பார்ப்புகளை பற்றி இங்கே காணலாம். 

1. வருமான வரி விகிதங்கள் 

மக்களின் செலவு செய்யும் திறனை அதிகரிக்க அரசு வருமான வரி விகிதங்கள் (Income Tax Rates) குறைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. நுகர்வு அதிகமானால் அது நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 5% முதல் ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு 30% வரை வருமான வரி விகிதங்கள் வேறுபடுகின்றன. 

பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2024-25 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டில் இதில் திருத்தங்கள் செய்யப்படும் என்று வரி செலுத்துவோர் (Taxpayers) நம்பிக்கையுடன் உள்ளனர். இது பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டி ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்கும்.

2.  80C விலக்கு வரம்புகளில் அதிகரிப்பு
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வரி செலுத்துவோரில் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு இப்போது ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சமாக உள்ளது. இந்த வரம்பை ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் முதலீட்டு விருப்பங்களின் வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்பு

3. 8வது சம்பள கமிஷன்
தினமும் அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்க சம்பள அமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) விரும்புகிறார்கள். இதற்காக 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஊழியர்களின் சம்பளத்தை மறுபரிசீலனை செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு (7th Pay Commission) அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், 8வது ஊதியக் குழுவுக்கான (8th Pay Commission) எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக, 2014 ஆம் ஆண்டில் 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தன. 

4 பிற கோரிக்கைகள் 

இது தவிர, பணக்காரர்களுக்கு சொத்து வரி விதிக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்தவும், MNREGA இல் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தவும்,  அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்கவும் பல கோரிக்கைகள் வந்துள்ளன. 

Budget 2024: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  பல்வேறு தொழில் சங்க குழுக்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகளை தொடங்கி நடத்தி வருகிறார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்கி வருகிறது. இதற்கான ஆயத்தப்பணிகளில் நிதி அமைச்சகம் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. 

மேலும் படிக்க | புதிய வேலையில் சேர்ந்த பிறகும் பிஎப் கணக்கை மாற்றவில்லையா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News