அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் மூலம் இயக்குகிறது. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களை போன்றே பிஎஸ்என்எல் நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது இந்நிலையில் தற்போது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது அதாவது பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் அதன் மூன்று பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப்போகிறது. ஏனென்றால் இந்த திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டது, இப்போது அந்த காலம் முடிந்துவிட்டதால் தொலைத்தொடர்பு நிறுவனம் அந்த சேவையை நிறுத்தப்போகிறது.
மேலும் படிக்க | ஆதார் எண் இல்லாமலும் e-Aadhaar டவுன்லோட் செய்யலாம்: முழு செயல்முறை இதோ
பிஎஸ்என்எல் அதன் ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களில் இரண்டை இன்று நிறுத்துகிறது, இதுகுறித்து நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் ரூ.275 பாரத் ஃபைபர் திட்டங்களின் இரண்டு திட்டங்களும் நவம்பர் 15ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவித்திருந்தது. ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்கள் இரண்டும் மாதாந்திர டேட்டா போஸ்ட் 3.3டிபி மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது. இரண்டு ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஒன்று 30 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது மற்றொன்று 60 எம்பிபிஎஸ் வேகத்துடன் வருகிறது. இந்த இரண்டும் திட்டங்களும் மொத்தமாக 75 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
இந்த திட்டங்களை தொடர்ந்து பிஎஸ்என்எல் நீக்கப்போவது ரூ.775 திட்டமாகும், இந்த திட்டத்தில் 2டிபி மாதாந்திர டேட்டா வழங்கப்படுகிறது, இணையத்தை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 10 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ரூ.775 திட்டமானது 150 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் 75 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது மற்றும் இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், லயன்ஸ்கேட், ஹங்கமா, சோனி லிவ், ஜீ5, வூட் மற்றும் யுப் டிவி போன்ற பல ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் கிடைக்கிறது.
மேலும் படிக்க | ஆதார் கார்ட் தரவுகளை பாதுகாக்க அதை லாக் / அன்லாக் செய்யலாம்: செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ