Security Features of Rs 500: கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் செல்லாததாக்கப்பட்டது, இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அப்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் தற்போது புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதுதவிர, மே 23 முதல் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறவும் ரிசர்வ் வங்கி உத்தரவினை பிறப்பித்து இருந்தது. அத்துடன் எந்த ஒரு வங்கிக் கிளையிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கிடையில் தற்போது இந்த அறிவிப்புக்கு பிறகு நாட்டிலேயே பெரிய நோட்டு 500 ரூபாயாகவே இருக்கும். இதனுடன், 500 ரூபாய் நோட்டின் புழக்கமும் நாட்டில் போதுமானதாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அசல் மற்றும் போலி 500 ரூபாய் நோட்டுகளை மக்கள் எப்படி அடையாளம் காண முடியும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | LIC பீமா ரத்னா... தினம் ₹166 முதலீட்டில் 50 லட்சம் அள்ளலாம்!
500 ரூபாய் நோட்டு
இந்தியாவில் இப்போது 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் தகவல்படி, உண்மையான ரூ.500 நோட்டுகளின் உள்ள இந்த அம்சங்கள் இல்லையென்றால் அவை போலி நோட்டுகள் என்பதை உறுதி செய்யலாம். எனவே, பின்வரும் அம்சங்கள் செக் செய்து 500 ரூபாய் நோட்டுகளை வாங்குங்கள். அதை நாம் பார்க்கலாம்.
1 ரிஜெஸ்டரில் 500 என்ற நம்பர் தெரியும்.
2 கருப்பு நிற இடத்தில் 500 என்று இருக்கும்.
3 தேவகிரியில் எழுத்து முறையில் 500 என இருக்கும்.
4 மையத்தில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும்.
5 கருப்பு நிற கோடுகள் பாதி தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அந்த கோட்டிலும் ‘பாரத்' என இந்தியிலும் மற்றும் ‘இந்தியா' என்ற ஆங்கிலத்திலும் வார்த்தைகள் இருக்கும்.
6 நோட்டை பின்னர் திருப்பினால், அதன் கலர் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்
7 மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலதுபுறத்தில் உத்தரவாதம், வாக்குறுதி, ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் இருக்கும்.
8 மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் 500 என்ன எண்ணின் வாட்டர்மார்க்ஸ் இருக்கும்.
9 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பர் இடது பக்கத்தில் இருந்து வலது புறத்திற்கு ஏறுவரிசையில் இருக்கும்.
10 ரூபாய் சின்னமான ₹ உடன் 500 என்ற எண் இருக்கும்.
11 வலதுபுறம் அசோக தூண் சின்னம் இருக்கும்.
12 ரூபாய் நோட்டின் இரு பக்கமும் பிரெய்லி முறையில் 500 என எழுதப்பட்டிருக்கும்.
13 இடதுபுறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட ஆண்டு இருக்கும்.
14 ஸ்வச் பாரத் லோகோ இருக்கும்.
15 பல்வேறு இந்திய மொழிகளில் 500 ரூபாய் என எழுதப்பட்டிருக்கும்.
16 செங்கோட்டை படம் இருக்கும்.
மேலும் படிக்க | LIC: மாதம் ரூ. 7, 572 செலுத்தினால் ரூ. 54 லட்சம் கிடைக்கும் - முழு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ