நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, சமீபத்தில் ஒரு சிறப்பு கிசான் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இன்னோவேஷன் ஹப் (ஆர்பிஐஎச்) உடன் இணைந்து இரண்டு கடன் வழங்கும் தயாரிப்புகளை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி சமீபத்தில் தனது சொந்த கடன் தளத்தை - அதாவது பொது தொழில்நுட்ப தளத்தை (PTPFC) அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க | டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த UPI Lite பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது
ஆக்சிஸ் வங்கி கிசான் கிரெடிட் கார்டு
ஆக்சிஸ் வங்கி சிறப்பு கிசான் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துகிறது. இது முற்றிலும் டிஜிட்டல் முறையில் இருக்கும். வாடிக்கையாளர்கள் எந்த தனி ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இப்போது இந்த கார்டு ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்படும், இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 1.6 லட்சம் கிரெடிட் கிடைக்கும். இதன் வெற்றியின் அடிப்படையில் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களிலும் இந்த சிறப்பு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
ஆக்சிஸ் வங்கி MSME கடன்கள்
கிசான் கிரெடிட் கார்டுடன், சிறு வணிகங்களுக்கான பாதுகாப்பற்ற MSME கடன்களை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயலாக்கப்படும். இது நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்.
சிறப்பு கிரெடிட் கார்டில் என்ன வித்தியாசம்?
வங்கி RBI இன் PTPFC இன் கீழ் இந்த பிராண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர் தகவல்களை மிகவும் பாதுகாப்பான முறையில் அணுக உதவும். இதன் மூலம், வாடிக்கையாளர்களின் பான் சரிபார்ப்பு, ஆதார் eKYC, கணக்கு தரவு மற்றும் நில ஆவணங்களை சரிபார்த்தல் மற்றும் வங்கிக் கணக்கைச் சரிபார்ப்பதற்கான பென்னி டிராப் சேவை ஆகியவற்றின் வசதியைப் பெறுவார். வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான மற்றும் சிறந்த கடன் சேவையை வழங்க முடியும் என்று நம்புகிறது. இதற்குப் பிறகு, வங்கி இந்த தளத்தில் மேலும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission குறித்து அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்.. உடனே தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ