7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மற்றொரு அகவிலைப்படி உயர்வு?

7th Pay Commission: நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை காரணமாக அதனை ஈடுசெய்யும் வகையில் அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) வழங்குகிறது.    

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2023, 11:34 AM IST
  • கடந்த செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது.
  • அகவிலைப்படி உயர்வால் 1.15 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்.
  • ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தியமைக்கப்படுகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மற்றொரு அகவிலைப்படி உயர்வு? title=

7th Pay Commission: நாட்டிலுள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.  அதாவது மத்திய அரசு தற்போது அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) மீண்டும் உயர்த்துவது குறித்து சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.  நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை காரணமாக அதனை ஈடுசெய்யும் வகையில் அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) வழங்குகிறது.

மேலும் படிக்க | 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் பிளான், அள்ளித்தரும் BSNL

பொதுவாக 7வது ஊதியக் குழுவின் கீழ் ஒரு வருடத்தில் இரண்டு முறைகள் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறது.  ஒவ்வொரு மாதமும் ஏஐசிபிஐ இன்டெக்ஸ் (அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) உட்பட பல்வேறு காரணிகளால் அகவிலைப்படி அதிகரிப்பு தீர்மானிக்கப்படுகிறது.  கடந்த செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது.  அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அகவைலைப்படியில் குறிப்பிடத்தக்க உயர்வு காணப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% வழங்கப்பட்டு வந்த நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அரசு அகவிலைப்படியை 4% உயர்த்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக இருக்கிறது.  7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை என ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் அகவிலைப்படியை திருத்தியமைக்கிறது.  தற்போது அரசு அகவிலைப்படியை உயர்த்த அரசு ஒப்புக் கொண்டால் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரியளவில் இது உதவியாக இருக்கும்.  அகவிலைப்படி உயர்வின் மூலமாக 50 லட்சம் மத்திய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்கள் என மொத்தமாக 1.15 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள்.

மேலும் படிக்க | வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி: இந்த படிவங்கள் முக்கியம்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News