Password-ஐ ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!!

பாஸ்வேர்டை ஹாக் செய்வதற்கான மென் பொருள் மிக எளிதாக கிடைக்கிறது. அதை வைத்து மிக எளிதாக பாஸ்வேர்டை ஹாக் செய்து விடலாம். ஆனால், எச்சரிக்கையாக இருந்தால், அதிலிருந்து தப்பிக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 07:54 PM IST
  • பாஸ்வேர்டை ஹாக் செய்வதற்கான மென் பொருள் மிக எளிதாக கிடைக்கிறது.
  • அதை வைத்து மிக எளிதாக பாஸ்வேர்டை ஹாக் செய்து விடலாம். ஆனால், எச்சரிக்கையாக இருந்தால், அதிலிருந்து தப்பிக்கலாம்.
  • இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் பலவீனமான பாஸ்வேர்டை வைத்திருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
Password-ஐ ஹேக் செய்ய 10 நிமிடங்கள் போதும்... தடுக்க இன்றே இதை செய்யுங்கள்..!!! title=

புதுடில்லி: இணையம் மூலம் நடக்கும் மோசடி சம்பவங்கள் (Cyber Crime) உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கின்றன. அந்த நிலையில் நமது தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் நமது முக்கிய பொறுப்பு.   இந்தியாவில் நான்கு பேரில் ஒருவர் பலவீனமான பாஸ்வேர்டை வைத்திருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கபர்ஸ்கியின் அறிக்கையின் மூலம், இந்தியாவில்  4 பேரில் ஒருவர் தங்கள் கணக்கைப் பாதுகாக்க பலவீனமான வைத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.  

கணிணி அல்லது மொபைலில் உள்ள பலவீனமான பாஸ்வேர்ட்டை, அதாவது கடவு சொல்லை மிக எளிதில் டிகோட் செய்யலாம். உங்கள் தனிப்பட்ட தரவுகள் மற்றும் ஹேக்கர்களுக்கு இடையில் உள்ள ஒரே ஒரு சுவர் அல்லது தடை என்னவென்றால் அது அபாஸ்வோர்ட் தான்.  இந்த சுவர் பலவீனமாக இருந்தால், உங்கள் கணக்கை ஹேக்கர்கள் அணுகுவதை  யாரும் தடுக்க முடியாது. 

இந்த கடவுச்சொல் உங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதை தடுப்பதோடு,  உங்கள் வங்கிக் கணக்கையும் பாதுகாப்பாக வைக்கிறது. 

மேலும் படிக்க | One Nation, One Ration Card தொடர்பான முக்கிய தகவல்கள்..!!!

இருப்பினும், மக்கள் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக எளிமையான பாஸ்வேர்டை செட் செய்கிறார்கள்.   இந்த பலவீனத்தை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இணைய பயனர்களுக்கு இரண்டாவது பெரிய சவால் வெவ்வேறு கணக்குகளுக்கு தனி பாஸ்வேர்டுகளை வைத்திருப்பது.  ஒரு நபர் இணையத்தில் சராசரியாக 27 வெவ்வேறு கணக்குகளை பயன்படுத்துகிறார் என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. சமூக ஊடகங்கள், ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் வங்கி கணக்குகள் என பல்வேறு வகை கணக்குகளை வைத்திருக்கிறார்.  இத்தகைய சூழ்நிலையில், எல்லா கணக்குகளுக்கும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை மக்கள் நினைவில் கொள்வது கடினம். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் இணைய கணக்குகளில் ஒரே பாஸ்வேர்டை வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஹேக்கர்கள் குறிவைப்பது இது போன்ற நபர்களைத் தான்.

சைபர் நிபுணர் ஜிதன் ஜெயின் என்பவர், நாம் எளிதில் நினைவில் இருக்கும் என்பதற்காக எளிதான மற்றும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துகிறோம். இது மிகவும் தவறு என்று கூறினார். இதன் மூலம், மக்களின் கணக்குகள் அனைத்தும் ஒன்றாக ஹேக் செய்யப்படும் சாத்தியக்கூறு உள்ளதாக கூறுகிறார். இது மட்டுமல்லாமல், ப்ரவுசரில் பாஸ்வேர்டை சேமிப்பது மக்களின் மிகப்பெரிய தவறு என்று அவர் கூறினார். நேரத்தை மிச்சப்படுத்த, பொதுவாக எந்த வலைத்தளத்திலும் பாஸ்வேர்டை  ”சேவ்” செய்து வைப்போம் என்று ஜெயின் கூறினார். இது ஹேக்கர்களின் வேலையை எளிதாக்குகிறது என்றார்.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால், சுமார் 32 சதவீதம் பேர் தங்கள் கடவுச்சொற்களை இணைய ப்ரவுசரில் சேமிக்கிறார்கள். மேலும் 25 சதவீத மக்கள்  தங்கள் பாஸ்வேர்ட் விபரங்களை கணினி அல்லது மொபைலில் தனித்தனியாக ஒரு குறிப்பு அல்லது பட்டியலாக சேமிக்கின்றனர். இது தவிர, 17 சதவீதம் பேர் பாஸ்வேர்ட் மேனஜரை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹேக்கர்களிடமிருந்து தப்பிப்பது கடினம்.

மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!

பாஸ்வேர்டை ஹாக் செய்வதற்கான மென் பொருள் மிக எளிதாக கிடைக்கிறது. அதை வைத்து மிக எளிதாக பாஸ்வேர்டை ஹாக் செய்து விடலாம். ஆனால், எச்சரிக்கையாக இருந்தால், அதிலிருந்து தப்பிக்கலாம். 

5 முதல் 6 எழுத்துகளின் கடவுச்சொல்லை ஹேக் செய்வது எளிதானது. இதை வெறும் 10 நிமிடங்களில் ஹேக் செய்யலாம், ஆனால் இந்த எழுத்துக்கள் 6 முதல் 8 ஆக இருந்தால், ஹேக் செய்ய அரை மணி நேரம் ஆகும். ஆனால் அதே நேரத்தில், இந்த கடவுச்சொல் 8 முதல் 12 எழுத்துகளாக இருந்தால், ​​அதை ஹாக் செய்வது மிகவும் கடினம்.

பாஸ்வேர்டை அமைக்கும் போது, ​​ உங்கள் தனிப்பட்ட தகவல்கள், அதாவது இடத்தின் பெயர், ஊரின பெயர் ஆகியவை அடங்கிய கடவுச்சொற்களை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சைபர் நிபுணர் அமித் துபே கூறினார். இது தவிர, ஏதேனும் ஒரு தொடராக,  எந்த எண்ணையும், அர்த்தம் கொண்ட வகையிலான எந்த எழுத்தையும் பாஸ்வேர்டாக வைக்கக்கூடாது. ஏனெனில் அவை எளிதில் ஹாக் செய்யப்படலாம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News