BSNL-ல் புதிய திட்டம் அறிமுகம்: விவரம் உள்ளே!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய விவரம் ஒன்றை அறிவித்துள்ளது.

Last Updated : Mar 26, 2018, 05:05 PM IST
BSNL-ல் புதிய திட்டம் அறிமுகம்: விவரம் உள்ளே!  title=

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியால் டெலிகாம் முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய விவரம் ஒன்றை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 

வரும் 2018-19 ஆம் வருடம் பி எஸ் என் எல் இணைய சேவை ரூ.4300 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 3.96 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக பி எஸ் என் எல் நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில்:- பி எஸ் என் எல் நிறுவனம் தனது இணைய சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்காக, இந்த 2018-19 நிதி ஆண்டில் மட்டும் ரூ.4300 கோடி செலவில் புதிய திட்டங்கள் போடப்பட்டுள்ளது.

அத்துடன் தனியார் சேவைகள் இல்லாத இடங்களிலும் பி எஸ் என் எல் சேவைகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 3 ஜி அலைக்கற்றைக்காக 12000 சேவை கோபுரங்களையும் 4 ஜி அலைக்கற்றைக்காக 10000 சேவை கோபுரங்களையும் அமைக்க உள்ளது என்றார்.

இதன் மூலம் பி எஸ் என் எல் 4ஜி-யில் அலைக்கற்றை சேவைகளை தொடங்கும் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.

Trending News