முந்துங்கள்! வோடபோனில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன் நிறுவனமும் எதிர்கால வேலைவாய்ப்பு திட்டம் என்பதை தொடங்குவதாக அறிவித்துள்ளது. 

Last Updated : Mar 22, 2018, 02:43 PM IST
முந்துங்கள்! வோடபோனில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! title=

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன் நிறுவனமும் எதிர்கால வேலைவாய்ப்பு திட்டம் என்பதை தொடங்குவதாக அறிவித்துள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ-வின் வருகைக்குப் பின், ஆட்டத்தை ஓரம் கட்டிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தினமும் பல அசத்தல் ஆஃபர்களை வழங்கிவருகின்றன. ஏர்டெல், ஜியோ அதிரடியாக இலவச டேட்டா ஆஃபர்களை அள்ளிவிட, ஏர்செல் உள்ளிட்ட சிறிய நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.

இந்நிலையில், வோடாஃபோன் நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமை அன்று சர்வதேச எதிர்கால வேலைவாய்ப்பு திட்டம் என்பதை தொடங்குவதாக அறிவித்துள்ளது. 

இதற்காக, அந்நிறுவனம்  Future jobs finder எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் 2022-க்குள் 18 நாடுகளில் 1கோடி இளைஞர்கள் இதன் மூலம் பயனடைவர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் உருவாகும் வேலைவாய்பையும் திறன்களையும் இணைப்பதும், இணையவழி படிப்புகளின் மூலம் அந்த திறன்களை மேம்படுத்துவதுமே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த இணையதளத்தில் தொடர் மனத்திறன் தேர்வுகளின் (Series of psychometric tests) மூலம் இளைஞர்களின் திறன் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்ற துறை வேலையை கண்டறியும்.

இதன் மூலம் அனைத்து பணியிடங்களும் டிஜிட்டல் மயமாகி, புதிய வேலை வாய்ப்பு உருவாவதால் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Trending News