அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் - ஹிலாரி இடையே விவாதம்!!

Last Updated : Oct 20, 2016, 09:55 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் - ஹிலாரி இடையே விவாதம்!! title=

குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் ஏற்கனவே ஹிலாரி-டிரம்ப் இடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி-டிரம்ப் இடையேயான 3-வது விவாதம் நடந்து வருகிறது.

லாஸ் வேகாஸ் நகரில் நடக்கும் இந்த 3வது விவாதம் 90 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். 

டிரம்ப் பேசியதாவது:-

ஹிலாரி-டிரம்ப் இடையேயான மோதலில், புடின் தனது நண்பர் அல்ல எனினும், ஒபாமா, ஹிலரியை விட புதின் சிறப்பாகச் செயல்பட்டதாக கூறியுள்ளார். மேலும், உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்த வேண்டும். உச்சநீதிமன்றம் பொது நிறுவனங்களுக்கு அல்லாமல் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என ஹிலாரி கூறினார். மேலும் ஹிலாரி திட்டம்தீட்டுவதாகவும், கல்வியை மேம்படுத்துவதே தனது திட்டம் என்றும் கூறியுள்ளார். இதனிடையே தன் மீதான பெண்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும் தன்னைப்போல பெண்களை மதிப்பவர்கள் யாருமில்லை என்றும் கூறியுள்ளார். 

ஹிலாரி பேசியதாவது:- 

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா வேவு பார்க்கப்படுவதற்கு டிரம்ப் வழிவகை செய்வதாகவும், டிரம்ப்புக்கு ரஷ்யா உதவ முயற்சிப்பதாகவும் ஹிலாரி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் மக்காளாட்சி முறை டிரம்ப்பால் சீரழிவதாகவு ஹிலாரி கூறியுள்ளார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் ஹிலாரி புகழையும் பெற்றார். இந்நிலையில், இந்த இறுதி விவாதத்தில் தொடக்கத்தில் ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்ப்பும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. 

Trending News