மெல்போர்ன்: மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான ரோவில்லியில் உள்ள ஆஸ்திரேலிய இந்திய சமூக மையத்தில் பிரதமர் ஸ்காட் மாரிசனால் நவம்பர் 12ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வெண்கல உருவச் சிலையின் தலையை சிலர் துண்டிக்க முயன்றனர்.
நவம்பர் 12-13 ஆம் தேதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சாட்சிகள் யாரிடமாவது இருந்தாலோ, அல்லது இதன் கேமரா அல்லது சிசிடிவு வீடியோ பதிவுகள் இருந்தாலோ, அவற்றை அளித்து உதவுமாறு விக்டோரியா காவல்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆஸ்திரேலிய (Australia) பிரதமர் மாரிசன் இந்த நாசவேலை பற்றி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன. "உலகில் ஆஸ்திரேலியா மிகவும் வெற்றிகரமான பன்முக கலாச்சார மற்றும் குடியேற்ற நாடாக உள்ளது. கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ளப்படாது" என்று மோரிசன் கூறினார்.
"இந்த அளவிலான அவமரியாதை நடப்பது வெட்கக்கேடானது. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்திற்கு பெரும் அவமரியாதையை அளித்துள்ளனர். இப்படிப்பட்ட செயல்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்," என்று பிரதமர் கூறினார்.
ALSO READ:Dubai Airshow: நவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை களமிறக்கும் ரஷ்யா!
சிலை திறந்து வைக்கப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சுங்க, சமூக பாதுகாப்பு மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜேசன் வுட், இது ஒரு "அவமானகரமான செயல்" என்று கூறியுள்ளார்.
"ஆஸ்திரேலியா அனைத்து மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை கொண்டாடுகிறது," என்று அவர் கூறினார். இதற்கிடையில், விக்டோரியாவின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சூர்ய பிரகாஷ் சோனி, நாசவேலையை "மிகத் தாழ்ந்த செயல்" என்று குறிப்பிட்டுள்ளார். "சமூகம் மிகவும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளது," என்று அவர் கூறினார்.
"மகாத்மா காந்தி (Mahatma Gandhi) அமைதி மற்றும் அகிம்சையின் சின்னம். அவர் ஒரு இந்தியத் தலைவர் மட்டுமல்ல, உலகளாவிய தலைவர். அவரது சிலை மீது யாருக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்பது எனக்கு புரியவில்லை" என்று சோனி கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
ALSO READ:திடீரென கணக்கில் வந்த ஒரு கோடி பணம்; வரம் என நினைத்தது சாபமானது..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR