புதுடெல்லி: காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக்கூறி சர்வதேச மட்டத்தில் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் பாகிஸ்தான் சில மோசமான செயல்களை இந்தியாவுக்கு எதிராக அரங்கேற்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக போர் அச்சுறுத்தலை குறித்து பேசியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) விஷயத்தில், மோடி அரசு ஏதாவது செய்தால், பாகிஸ்தானும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்று இம்ரான் கான் கூறியுள்ளார். இரண்டு அணுசக்தி நாடுகளுக்கிடையே (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) போர் ஏற்பட்டால், அது முழு உலகையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் சந்திப்புக்கு பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா எங்களை திவாலாக்க முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளது என்று கூறியிருந்தார்.
காஷ்மீர் தீர்ப்புக்கான நேரம் வந்துவிட்டது என்று இம்ரான் கான் கூறினார். மேலும் காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேசப்பட்டபோது, பயங்கரவாதம் குற்றம் சாட்டப்பட்டது. 370வது பிரிவை காஷ்மீரில் இருந்து நீக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக எங்கள் மீது குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.