‘Joe Biden-ன் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது’ – Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிடனின் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2020, 01:53 PM IST
  • துணை அதிபராக இருக்க கலிபோர்னியா செனேட்டரை தேர்ந்தெடுத்தது ஒரு தவறான செயல் என்று டிரம்ப் தெரிவித்தார்.
  • பிடன் காவல்துறையின் கண்ணியத்தையும் மரியாதையையும் பறித்துக் கொண்டிருக்கிறார் – டிரம்ப்.
  • அதிபர் டிரம்ப், தனது உரையில், ஹாரிஸ் காவல்துறைக்கு விரோதமானவர் எனக் கூறினார்.
‘Joe Biden-ன் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது’ – Donald Trump title=

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோரைத் தாக்கி, 'பிடனின் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்' என்றும் அவருக்கு துணை அதிபராக இருக்க கலிபோர்னியா செனேட்டரை தேர்ந்தெடுத்தது ஒரு தவறான செயல் என்றும் கூறியுள்ளார்.

"ஜோ பிடன் (Joe Biden) அதிபராகிவிட்டால், அவர் உடனடியாக அமெரிக்காவின் ஒவ்வொரு காவல் துறையையும் அகற்றுவதற்கான சட்டத்தை இயற்றுவார். அநேகமாக கமலா ஹேரிஸ் (Kamala Harris) இன்னும் மோசமானவர். அவர் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இருப்பதை விட அதிகமான இந்தியர்களின் ஆதரவு எனக்கு உள்ளது" என்று டிரம்ப் கூறினார். நியூயார்க் போலீஸ் நலச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் பேசும் போது டிரம்ப் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப், தனது உரையில், ஹாரிஸ் காவல்துறைக்கு விரோதமானவர் எனக் கூறியதுடன், கமலாவும் பிடனும் போலீசார் மீதான இடதுசாரிப் போரின் மையத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

“பிடன் உங்கள் கண்ணியத்தையும் உங்கள் மரியாதையையும் பறித்துக் கொண்டிருக்கிறார். பிடனின் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்" என்று முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனைப் பற்றி டிரம்ப் காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

சமீபத்திய வாரங்களில், காவல்துறைக்கான நிதி வழங்கலையும் வசதிகளையும் குறைப்பதற்கு பிடனின் ஆதரவு உள்ளது என்று டிரம்ப் பலமுறை வலியுறுத்தியுள்ளார் என அமெரிக்க (America) ஊடகங்கள் தெரிவித்தன.

ALSO READ: American Elections: பிடன் அதிபரானால் இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா துணை அதிபர்!!

வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நியூயார்க் நகரத்தின் போலீஸ் பெனவலண்ட் அசோசியேஷன் (NYCPBA) ஒப்புதல் அளித்தது.

நியூயார்க் நகர முன்னாள் மேயர் ருடால்ப் கியுலியானி, வெள்ளிக்கிழமை NYCPBA கூட்டத்தில் பேசினார். அவர் கமலா ஹாரிஸின் வழக்கு விசாரணை பணிகளைத் தாக்கிப் பேசினார்.  ஹாரிஸ் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது, ​​அவர் கீ மட்டத்தில் இருந்தவர்களைத் தண்டித்தார், ஆனால் செல்வாக்கு மிக்கவர்களை தண்டிக்காமல் விட்டுள்ளார் என கியுலியானி சுட்டிக்காட்டினார்.

ALSO READ: வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட டிரம்ப்!!

Trending News