மெக்சிகோவின் 'எல் போபோ' எரிமலை வெடித்து, புகையைக் கக்கிக் கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக உறக்கத்தில் இருந்த இந்த எரிமலை, 1994 இல் மீண்டும் செயலுக்கு வந்தது. மெக்சிகோவின் Popocatepetl, "El Popo" என்று அழைக்கப்படும் எரிமலை, சமீபத்தில் அதன் உமிழும் செயல்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது. இது நாட்டின் மிகவும் முக்கியமான எரிமலைகளில் ஒன்றாகும்.
வியாழக்கிழமை (மே 25) எரிமலையில் இருந்து சாம்பல் மற்றும் புகை வெடிப்பதை செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பிரபலமாக பார்க்கப்படுகிறது.
Mexico's Popocatepetl volcano has recently intensified its fiery activity, putting residents on high alert in the nearby ash-covered towns of Santiago Xalitzintla and San Nicolas de los Ranchos, in the state of Puebla pic.twitter.com/nzaOcAZKvi
— Reuters (@Reuters) May 26, 2023
வியாழக்கிழமை நிலவரப்படி எரிமலை குறைந்த சாம்பல் உள்ளடக்கத்துடன் நீர், நீராவி மற்றும் வாயு என தொடர்ச்சியாக உமிழ்ந்துக் கொண்டிருக்கிறது, என மெக்சிகோவின் சிவில் பாதுகாப்பிற்கான தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பு, தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்
இந்த வார தொடக்கத்தில் எரிமலை சாம்பலால் பல நகரங்களின் பள்ளிகள் மூடப்பட்டன. அதோடு, மெக்சிகோ நகரின் பெனிட்டோ ஜுவாரெஸ் சர்வதேச விமான நிலையம் சனிக்கிழமை (மே 20) ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது.
எரிமலை வெடிப்பினால், குறைந்த அலைவீச்சு நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எரிமலையின் சீற்றத்தில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் சாம்பல் தெற்கு-தென்கிழக்கு திசையில் 400 முதல் 600 மீ உயரம் வரை செல்கிறது.
விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட Popocatepetl எரிமலை வெடிப்பின் அற்புதமான காட்சி இது.
Amazing view of Popocatepetl Volcano captured by a passenger from a flight #Volcano #Mexico #Popocatepetl #Eruption #ElPopo #SantiagoXalizintla #Puebla #Morelos #Atlixco #Viral #Climate pic.twitter.com/zU7LKFR2V2
— Earth42morrow (@Earth42morrow) May 23, 2023
பியூப்லா மாநிலத்தில் உள்ள சாண்டியாகோ சாலிட்ஜின்ட்லா மற்றும் சான் நிக்கோலஸ் டி லாஸ் ராஞ்சோஸ் ஆகிய நகரங்களில் வசிப்பவர்கள் எரிமலைச் செயல்பாடு குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
San Nicolas de los Ranchos நகரில் வசிக்கும்மக்கள், எரிமலை வெடிப்பினால் ஏற்படும் அபாயங்களை நினைத்து பயப்படுகிறார்கள், ஆனால் அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எரிமலை என்றால் என்ன?
புவியின் உட்பகுதியில் பாறைக்குழம்புகள் இருக்கும். அவை, திட, திரவ, வாயு நிலையில் உள்ளன. அவை ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தைத் தாண்டிய பிறகு, துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்வதை எரிமலை வெடிப்பு என்று அழைக்கிறோம்
Smoking Hill
Popocatepetl என்ற வார்த்தையின் பொருள் "Smoking Hill" என்பதாகும், இது உலகின் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படும் எரிமலைகளில் ஒன்றாகும். இது மெக்ஸிகோ நகரத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 45 மைல் தொலைவில் உயரமான மலை இது.
1994 இல் நீண்ட கால உறக்கத்தில் இருந்து எழுந்த இந்த எரிமலை பல தசாப்தங்களாக இயக்கத்தில் இல்லாமல் இருந்தாலும், அது வழக்கமான எரிமலைப் போலவே இயங்குவதாக மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் (UNAM) புவி இயற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் போபோகேட்பெட்டில் இதேபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தன, ஆனால் தற்போதைய கட்டம் "மிகவும் ஆபத்தான திசையில் செல்லக்கூடும்" என்று அஞ்சப்படுகிறது.
எரிமலையைச் சுற்றியுள்ள நில அதிர்வு செயல்பாடுகளையும், அது வெளியேற்றும் பொருட்கள் மற்றும் வாயுக்களின் கலவையையும் தொடர்ந்து வல்லுநர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த எரிமலை பெரிய அளவில் வெடிக்குமா என்பதற்கான சாத்தியக்கூறுகளை கணிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
மேலும் படிக்க | பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பும் விருதுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ