El Popo Smoking Hill: உறக்கத்தில் இருந்து எழுந்த எரிமலையின் செயல்பாடு எப்படி இருக்கும்? அச்சத்தில் தவிக்கும் மக்கள்! முன்னேற்பாடுகளுடன் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ள மெக்சிகோ
வியாழக்கிழமையான இன்று காலை டெல்லி போலீசாருக்கு தொலைபேசியில் மர்ம நபர் டெல்லி ஐகோர்டு வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு சில மணிநேரத்தில் வெடிக்க உள்ளது என்று மர்ம நபர் கூறினான்.
இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய டெல்லி போலீசார் கடைசி வரை எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும் டெல்லி ஐகோர்டு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
சென்னை, மும்பை மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் விமானத்தை கடத்துவதற்காக சாத்தியாமான முயற்சிகள் எடுக்கப்படும் என பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது, இதனையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விமான நிறுவனங்கள் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளன. விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி நாளை பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தலைநகர் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 70 ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இரு படகுகள் இந்தியாவை நோக்கி புறப்பட்டு உள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கராச்சி துறைமுகத்தில் இருந்து இரு படகுகளின் நகர்வு குறித்து தகவல் தெரிவித்து உள்ள உளவுத்துறை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை தயார் மற்றும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்து உள்ளது. இரு படகுகளும் கடலில் எங்கு உள்ளது என்பதை உளவுத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.