காபூல்: "காபூல் இன்டர் கான்டினென்டல் ஹோட்டலில்" இன்று பயங்கரவாதிகள் தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்!
ஆப்கானிய அரசாங்க அதிகாரிகளின் தகவலின்படி, மர்ம நபர்களின் தாக்குதலுக்கு பிறகு நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை எதிர்த்து துப்பாக்கச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த எதிர் தாக்குதலில், பயங்கரவாத கும்பலைச் சேர்ந்த இருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டதாக ஆப்கானிய உள்துறை அமைச்சக செய்தியாளர் நஜீப் டேனிஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலில் ஈடுப்பட்ட இதர பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலைக் குறித்து அவர் தெரிவிக்கையில்... ''இன்டர்நஷனல் ஹோட்டல்-ன் ஐந்து மாடிகளில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 100க்கும் அதிகமானோர் இத்தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்களால் மீட்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்!
எனினும் இத்தாக்குதலில், ஹோட்டலுக்கு வருகை புரிந்த 5 வாடிக்கையாளர்கள் இந்த தாக்குதலில் உயிர்யிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 8 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்!