120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாகிஸ்தானின் இந்த சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், ஒருபோதும் நோய்வாய்ப்படுவதில்லை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 4, 2022, 12:20 AM IST
  • 120 வயது வாழும் மக்கள்
  • இது பாகிஸ்தான் மக்களின் ஆரோக்கிய கதை
  • 90 வயதிலும் குழந்தை பெறும் பெண்கள்
120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?   title=

ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது.

வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. 

இதுதவிர மற்றொரு சிறப்பு விஷயம் குறித்தும் பாகிஸ்தானின் பெயர் உலக அளவில் அடிபடுகிறது.. அதுதான் இங்கு குடியேறிய ஹன்சா சமூகத்தின் ஆரோக்கியம் அளிக்கும் ஆச்சரியமே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க | இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிராகரிப்பு

ஹன்சா சமூகத்தின் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கின்றனர்
இன்று உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருகிறது. மக்கள் மிக இளம் வயதிலேயே பெரிய நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு பக்கம் இத்தனை பிரச்சனைகள் இருந்தால், மறுபுறம் நோயே இல்லாத உலகின் ஒரு மூலை இருப்பது ஆச்சரியமாகத் தானே இருக்கும்?

 இங்குள்ள மக்கள் உடல் தகுதி மட்டுமின்றி 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர். உலகின் இந்த மூலை பாகிஸ்தானில் (Pakistan) உள்ளது.

வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகளின்படி, இந்த பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் எந்த நோயும் அவர்களைத் அண்டாத அளவுக்கு உடல் வலிமையுடன் உள்ளனர்.

world

அவர்கள் உலகில் நீண்ட காலம் வாழும், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான மக்களில் கணக்கிடப்படுகிறார்கள். அவர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 120 ஆண்டுகள் ஆகும், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள எந்த சமூகத்தையும் விட அதிகம்.

ஹன்சா பள்ளத்தாக்கு (Pakistan Valley) ஒரு மலையில் அமைந்துள்ளது. இந்த மலையில் அமைந்துள்ள பல கிராமங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல கிராமங்கள் நூறு அல்லது இருநூறு ஆண்டுகள் பழமையானவை.

ஹன்சா சமூகத்தின் வாழ்க்கை முறை தொடர்பான தனித்துவமான வழிகள் காரணமாக பல புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஜேம்ஸ் ஹில்டனின் லாஸ்ட் ஹொரைசன் நாவலிலும் ஹன்ஸா பள்ளத்தாக்கு மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பின்னர் ஃபிராங்க் காப்ராவின் படமும் இந்தப் புத்தகத்தில் வந்தது.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு: இம்ரான் கட்சியின் மாற்று திட்டங்கள் என்ன?

புற்றுநோய் இல்லா ஊர்
இங்குள்ள பெண்கள் 60 வயதில் மட்டுமல்ல, சிலர் 90 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி உடையவர்களாய் இருக்கிறார்கள். இந்த சமூகத்தின் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் திறன் மிகவும் அதிகமாக உள்ளதாக நோமேடிக் இணையதளம் (Nomadic website) தெரிவித்துள்ளது.

பல மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த சமூகத்துடன் தங்கி, இந்த சமூகத்தினரின் வாழ்க்கை தொடர்பான பிற விஷயங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.

விஞ்ஞானி டாக்டர் ராபர்ட் மெக்ரிசன், பல ஆண்டுகளாக இந்த சமூகத்தினருடன் தங்கி இருந்தார். புற்று நோய், அல்சர், நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட காணமுடியவிலை என்று அவர் கூறுகிறார்.

மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது

இங்குள்ள மண் வளமானதாக இருப்பதால் இங்கு நல்ல விவசாயம் செய்வது கடினம் அல்ல. அவர்களின் உணவில் சுத்தமான கரிம காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளது. இது அவர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது. இங்குள்ள தண்ணீரும் மிகவும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கிறது என பல ஆரோக்கிய விஷயங்களை அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் கண்டறிந்தார்..

நோய் எதிர்ப்பு அமைப்பு
இங்குள்ளவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது மட்டுமின்றி, முதுமையிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அபாரமானது என்று விஞ்ஞானிகளே அதிசயப்படுகின்றனர்.

இந்த மக்கள் தாவரங்களில் இருந்து வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர்கள் திராட்சை, பிளம்ஸ், செர்ரி மற்றும் பீச். இது தவிர, கோதுமை, ஜோவர் மற்றும் பருப்பு வகைகளையும் பயிரிடுகின்றனர்.

மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News