Guru Peyarchi Palangal: பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தி. இதனால் யாருக்கு அதிக லாபம்? எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்? குரு வக்ர நிவர்த்தி ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.
Guru Vakra Peyrachi Palangal: அனைத்து கிரகங்களில் அதிக சுப பலன்களை அளிக்கும் கிரகமாக உள்ளவர் குரு பகவான். செல்வம், கல்வி, திருமண வாழ்க்கை, குழந்தைகள், லாபம், செழுமை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் பெறுகிறார். குரு பகவான் இப்போது ரிஷப ராசியில் உள்ளார். மே மாதம் அவர் மிதுன ராசியின் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சிக்கு முன்னதாக பிப்ரவரி 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். குரு வக்ர நிவர்த்தி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.
சுப கிரகமான குரு பகவான் பல வித நற்பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். செல்வம், கல்வி, திருமண வாழ்க்கை, குழந்தைகள், லாபம், செழுமை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் பெறுகிறார்.
குரு பகவான் இப்போது ரிஷப ராசியில் உள்ளார். மே மாதம் அவர் மிதுன ராசியின் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சிக்கு முன்னதாக பிப்ரவரி 4 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். குரு வக்ர நிவர்த்தியும் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி அனுகூலமான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். வருமானமும் அதிகரிக்கும். முதலீட்டில் லாபம் இருக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி லாபகரமானதாக இருக்கும். சுபமான நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலைத் துறையில் முன்னேற்றம் அடைவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரம் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி மங்களகரமானதாக இருக்கும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். தொழிலிலும் லாபம் ஏற்படும். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கும் சாதகமாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
குரு பகவானின் பரிபூரண அருளைப் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்லோகத்தையும் 'குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், தக்ஷிணாமூர்த்தயே நமஹ' என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.