எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தினை அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார்.
அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
Big Rally tomorrow night in Orlando, Florida, looks to be setting records. We are building large movie screens outside to take care of everybody. Over 100,000 requests. Our Country is doing great, far beyond what the haters & losers thought possible - and it will only get better!
— Donald J. Trump (@realDonaldTrump) June 17, 2019
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் சுமார் 20,000 பேர் திரண்டிருந்த கூட்டத்தில் ட்ரம்ப் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
பொதுகூட்டத்தில் பேசிய அவர் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Trump 2020 Campaign Rally in Orlando, Florida pic.twitter.com/lPVHJUsx7n
— Joe Bitar (@JoeBitar) June 19, 2019
தனது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால், இரண்டாவது முறையாக மக்கள் தனக்கு வாய்ப்பு அளிப்பார்கள் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.