சீனா விமான விபத்து: இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தகவல்

சீனா ஈஸ்டர்ன் விமானம் MU5735 திங்களன்று குன்மிங் மற்றும் குவாங்சூ இடையே பறந்து கொண்டிருந்தபோது 132 பேருடன் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 27, 2022, 11:52 AM IST
சீனா விமான விபத்து: இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தகவல் title=

பெய்ஜிங்: கடந்த திங்கட்கிழமை மலைப்பகுதியில் 132 பேருடன் மோதி விபத்துக்குள்ளான சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இரண்டாவது கருப்புப் பெட்டியை சீன அதிகாரிகள் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. 

"சீனா ஈஸ்டர்ன் விமானம் MU5735 ல் இருந்து இரண்டாவது கருப்பு பெட்டி மார்ச் 27 அன்று மீட்கப்பட்டது," Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை குன்மிங் மற்றும் குவாங்சூ இடையே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்த போது 132 பேருடன் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமானத்தில் இரண்டு ஃப்ளைட் ரெக்கார்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன -  விமானம், வேகம், உயரம் மற்றும் தலைப்பு போன்ற விமானத் தரவைக் கண்காணிக்கும் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR).இது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR) இது விமானைகளுக்கு இடையிலான உரையாடல்களை பதிவு செய்யும். இது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே பெய்ஜிங்கில் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

முன்னதாக சீனாவின் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும், டிஎன்ஏ சோதனை மூலம் அவர்களின் அடையாளங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்தியதாகவும் செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. 

கருப்பு பெட்டி என்றால் என்ன?

'பிளாக் பாக்ஸ்' அல்லது ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் என்பது ஒரு எலக்ட்ரானிக் சாதனமாகும், இது விமானத்தின் காக்பிட்  பகுதியில் விமானிகளின் உரையாடல்கள், காற்றழுத்தம் மற்றும் உயரம் உள்ளிட்ட சில முக்கியமான தகவல்களை பதிவு செய்கிறது. விமான விபத்துகள் மற்றும் சம்பவங்களை விசாரணைக்கு உதவும் வகையில், இந்த சாதனம் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த நவீன சாதனமான பிளாக் பாக்ஸ் என்பது  கருப்பு நிறத்தில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் பாக்ஸ் மீது பிரகாசமான ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டிருக்கும். விபத்தின் போது எளிதில் கண்டுபிடிக்க இது புலனாய்வாளர்களுக்கு உதவுகிறது. விபத்துக்கு முந்தைய கடைசி நிமிடங்களின் முக்கியத் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், எந்த விதமான விபத்திலும் சேதமடையாமல் தாங்கும் வகையில் இந்த சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை உயர் வெப்பநிலையை தாங்கும் வண்ணமும், துருப்பிடிக்காத  வகையிலும் எஃகினால் ஆன கொள்கலனில் இருக்கும்.

மேலும் படிக்க | China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!

இரண்டு வகையான ஃப்ளைட் ரெக்கார்டர் சாதனங்கள் உள்ளன-விமானத் தரவு ரெக்கார்டர் (FDR) மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR). FDR ஆனது விமானத்தின் போது வினாடிக்கு பல முறை சேகரிக்கப்பட்ட டஜன் கணக்கான அளவுருக்களின் வரலாற்றை பதிவு செய்கிறது, அதே நேரத்தில் CVR விமானிகளுக்கு இடையேயான உரையாடல்கள் உட்பட காக்பிட்டிற்குள் ஒலிகளை பதிவு செய்கிறது.

மேலும் படிக்க | இவையே மிகவும் மலிவான 5 அட்வென்ச்சர் பைக்குகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News