9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டிக்காக சென்னையின் எப்சி அணி முழுமையாகத் தயாராகி வருகிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஃபாவும் சென்னை வந்துவிட்டார்.
வரும் சீசனுக்கான சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜெர்மனி முன்னாள் முன்கள வீரரான தாமஸ் பிரட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் கடந்த ஒன்றாம் தேதி சென்னை வந்தார்.
மேலும் படிக்க | பராக் ஸ்ரீவாஸ் ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
Who is Thomas Brdaric?
Everything to get you started in the full episode on YouTube!
https://t.co/2YhucWogvR#AllInForChennnaiyin#VanakkamThomas pic.twitter.com/bHD96kzW1n
— Chennaiyin FC (@ChennaiyinFC) July 3, 2022
தான் தாக்குதல் கால்பந்து விளையாடவே விரும்புவதாக தாமஸ் பிரடாரிக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கடந்த 10 சீசன்களில் அவர் பயிற்சியளித்த ஒவ்வொரு கிளப்பும் ஒரு ஆட்டத்திற்கு சராசரியாக 2 கோல்கள் அடித்துள்ளன.
ஜெர்மனி அணிக்காக 8 சர்வதேச போட்டிகளில் விளையாடியவரான தாமஸ் பிரடாரிக் ஜெர்மனி மற்றும் அல்பேனியாவில் கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.
மேலும் படிக்க | 3 பந்தில் 24 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த பும்ரா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR