இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அணிந்திருந்த காலணி அவருக்கு சிக்கலை கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட ஷூ அணிந்தத்தற்காக அவர், கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஒரு நேர்காணலின்போது பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் காலணியான அடிடாஸ் சம்பா ஷூவை அணிந்திருந்தார். தனது அரசின் புதிய வரி கொள்கைகள் மற்றும் குழந்தைநலக் கொள்கைகள் தொடர்பாக இந்த நேர்காணலை அவர் கொடுத்திருந்தார். சுனக்கின் வீடியோ அவரது அரசாங்கத்தின் கொள்கைகளை விளக்குவதாக இருந்தது, ஆனால் அவரது காலணிகள் தான அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சமூக வலைத்தள பயனர்கள் விமர்சனம்
மக்களுடன் இணக்கமாக இருப்பது போல் காட்டுவதற்கு பிரதமர் ரிஷி சுனக் இவ்வாறு செய்வதாக சமூக வலைத்தள பயனர்களால் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த காலணிகள் பிரிட்டனில் மிகவும் பொதுவானவை. சுமார் 100 டாலர் மதிப்புடையது. அதாவது சுமார் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரையில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுனக் இங்கிலாந்தின் வரலாற்றில் பணக்கார பிரதமர். இப்படிப்பட்ட நிலையில் வெறும் 100 டாலர் விலையில் அவர் அணியும் காலணிகளை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதில் விந்தை என்னவென்றால், ரிஷி சுனக் (Rishi Sunak) 'சாதாரண மனிதராக' தோன்ற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அடிடாஸ் சம்பா ஸ்னீக்கர்களை அணிந்ததற்காக சுனக் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஆனால் பராக் ஒபாமா மற்றும் கமலா ஹாரிஸ் போன்றவர்கள் இந்த காலணிகளை அணிந்தபோது, அவர்கள் மிகவும் பாராட்டப்பட்டார்.
ஒரு பயனர், “பிரதமராக பதவிவகிப்பவர் இவ்வாறு செய்வதை மன்னிக்க முடியாது. இளமையாகவும் ட்ரெண்டியாகவும் காட்டிக்கொள்ள அவர் மெனக்கெடுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொருவர், “அடிடாஸ் இந்த ஷு தயாரிப்பதை நிறுத்திவிடலாம். ரிஷி சுனக் இதன் மதிப்பையே கெடுத்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தன்னை விமர்சிக்கும் சம்பா ஷூ ரசிகர்களிடம் ரிஷி சுனக் மன்னிப்பைக் கோருவதாக கூறினார். ஆனால், தான் நீண்டகாலமாக அடிடாஸ் ஷூக்களை அணிந்து வருவதாகவும், அந்த காலணிகள் எனக்கு எப்போதுமே பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை மற்றும் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருகிறது. இந்த நிலையில் ரிஷி சுனக், இவ்வாறு விமர்சிக்கப்படுவது வருகிற தேர்தலில் கட்சியின் நம்பிக்கையை சோதிப்பது போல் உள்ளது கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டன் பிரதமர் தனது அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளை விளக்கும் நோக்கி , 10 டவுனிங் தெருவில் உள்ள தனது இல்லத்தில் ஒரு நேர்காணலை நடத்தி விளம்பரப்படுத்தினார். அதன் வீடியோ கடந்த வியாழக்கிழமை வெளியானது. ஆனால், பார்வையாளர்களின் கவனம் சுனக்கின் காலணி மீது சென்றது. சுனக், பார்மலாக அணியும் முழுக்கை சட்டை பேண்டுடன் வெள்ளை நிற ஸ்னீக்கர்களை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பொய் சொன்னவருக்கு 80 கசையடி... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ