311 இந்தியர்கள் நாடு கடத்தல்; சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேற முயற்சி!!

இந்தியாவில் இருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற சுமார் 311 பேரை இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 17, 2019, 02:15 PM IST
311 இந்தியர்கள் நாடு கடத்தல்; சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேற முயற்சி!! title=

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாட்டில் இருந்து வெளியேற்றுவதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற சுமார் 311 பேரை இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கும் விதமாக டொனால்ட் டிரம்ப் புதிய கொள்கையை அறிமுகம் செய்தார். அப்பொழுது அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சர்வதேச தரகர்களின் உதவியுடன் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அமெரிக்காவில் நுழைய சுமார் 311 பேர் மெக்ஸிகோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து இரண்டு தனியார் விமானங்களின் மூலம் மெக்ஸிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதாக கூறி, இவர்களிடம் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என மூத்த குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களிடம் அடையாள சான்றிதழ்கள் மற்றும் சரியான பாஸ்போர்ட்டுகள் கேட்ட போது தான், சட்டவிரோதமாக அவர்கள் நுழைய முயற்ச்சி செய்தது தெரியவந்தது. 

311 பேரிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் அவர்கள் தங்குவது, விமான கட்டணம், உணவு போன்றவை அடங்கும். அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முகவர்கள் ஒரு வாரம் முதல் ஒரு மாத காலம் வரை எடுத்துக்கொண்டனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

"தேசிய குடிவரவு நிறுவனம் (The National Immigration Institute -Maxico) புதன்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 310 ஆண்களையும் ஒரு பெண்ணையும் டோலுகாவிலிருந்து புதுடெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இவர்கள் நாளை டெல்லிக்கு வந்தடைவார்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

டெல்லி வரும் அவர்களிடம் 3-4 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்படும். அப்பொழுது சட்டவிரோத பயணம் குறித்து அவர்களிடம் மெக்ஸிகோ அரசு கேள்வி எழுப்பும். இந்த விஷயத்தில் சட்ட வழக்குக்கூட பதிவு செய்யப்படலாம். மேலும் இந்திய அரசும் தனது பங்கு விசாரிக்கப்படும்" என்று மற்றொரு மூத்த குடிவரவு அதிகாரி ஏஎன்ஐ(ANI) செய்தி ஊடகத்திடம் கூறிள்ளார். 

திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலோர் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கடி மெக்சிகோவுக்குச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News