பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணிக்கு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 6 பேர் பலியாயினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக டவர் நகரில் 18 வயதான இளைஞர் ஒருவர் கென்ட் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பயங்கரவாத அச்சுறுத்தல் பிரிவு மூத்த தேசிய ஒருங்கிணைப்பாளர் நீல் பாசு கூறுகையில் "இன்று காலை முதல் எங்கள் விசாரணையில் சந்தேகத்திற்கு ஆளான மேலும் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
லண்டன் சுரங்க ரயில் பாதையில் பக்கெட் குண்டு வெடித்ததில், 29 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
லண்டனில் சுரங்க பாதையில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்தால், ரயில் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி உள்ளனர். மேலும் பலருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது என லண்டன் மெட்ரோ செய்தித்தாள் கூறியுள்ளது.
தற்போது அங்கு மீட்பு பணியும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
பாகிஸ்தானில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகினர். 38 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் நாடாளுமன்ற துணை சபாநாயகரும் காயமடைந்தார். இந்த குண்டு வெடிப்பு சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் வெடித்துள்ளது.
காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர்.
இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மிகப்பெரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசு தின விழாவையொட்டி அசாம் மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் அசாமில் பலத்த பாதுகாப்பையும் மீறி குடியரசு தின நாளான இன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
உல்பா தீவிரவாதிகளே இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும். தங்களது இருப்பை உணர்த்தும் விதமாகவே குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 32 பேர் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: பாக்தாத்தின் வடமேற்குப் பகுதியில் இன்று மக்கள் கூடியிருந்த இடத்தில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர். 61 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள். பாக்தாத்தில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
மத்திய துருக்கியின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கெசேரி குண்டு வெடித்து 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
கெசேரி நகரில் ராணுவ வீரர்களை ஏற்றுக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இராணுவ பேருந்தில் ராணுவத்தின் கீழ் நிலையில் ரேங்கில் பணியாற்றி வந்த இந்த வீரர்கள் கமோண்டா தலைமை அலுவலகத்தில் இருந்து விடுப்பு எடுத்து செல்வதற்கு அனுமதி கிடைத்தையடுத்து பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த பேருந்து மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தனர்.
கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல் படி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பிஸ்கேக் பகுதியில் சீன தூதரகம் உள்ளது. தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து குண்டு வெடித்ததாக கூறப்படுகின்றனர். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பேரணியில் தற்கொலை படையை சேர்ந்த 3 பேரின் குண்டு வெடித்ததில் 50 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் காபூலில் தெக் மசங்கில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக மின்சார லைனைக் கொண்டு செல்லக் கோரி மாபெரும் பேரணி நடந்து கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தற்கொலை படையை சேர்ந்த 3 பேர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.