ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 32 பேர் பலியாகினர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: பாக்தாத்தின் வடமேற்குப் பகுதியில் இன்று மக்கள் கூடியிருந்த இடத்தில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர். 61 பேர் காயமடைந்தனர். பலியானவர்கள் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்கள். பாக்தாத்தில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை பாக்தாத்தின் சந்தைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 28 பேர் பலியாகினர். 54 பேர் காயமடைந்தனர். கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது. எனவே இந்தத் தாக்குதலையும் ஐஎஸ் இயக்கம் நிகழ்த்தியிருக்கலாம் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஐஎஸ் இயக்கம் இந்த தாக்குதலை குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை.