இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
அதிமுகவில் இரு அணிகள் பிளவு காரணமாக ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, மேலும் சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிடிவி தினகரன், மல்லிகார்ஜூன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று டெல்லி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.
ஆர்கேநகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி தில் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர். 5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுகேஷிடம் தினகரன் கேட்டுக்கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லி தனிக்கோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்து இருக்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருகிற 29-ம் தேதி வரை காவல் நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரது நீதிமன்ற காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 8-ம் தேதி அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டுமென எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரனின் வங்கிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் இன்று அதிமுக தொண்டர் ஒழுங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட் இன்று உத்தரவிட்டது.
கடந்த வாரம் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தினகரனை 5 நாட்கள் போலீசார் டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
டெல்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் நரேஷிடம் 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைதைத் தொடர்ந்து தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க, தினகரன் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, தினகரனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான டிடிவி தினகரனை டெல்லி போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னையை சேர்ந்த 3 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர் டெல்லி போலீசார். இந்நிலையில், சென்னையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று இரவு 7.40 மணியளவில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை டெல்லிக்கு அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லியில் கைதான ஹவாலா புரோக்கர் நத்துசிங்கிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
லஞ்சம் கொடுக்க ரூ.10 கோடி பணத்தை சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு ஹவாலா ஏஜெண்ட் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தரகராக செயல்பட்டவர் நரேஷ் என தெரிய வந்தது.
இவர் இன்று தாய்லாந்தில் இருந்து டெல்லி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உஷார் படுத்தப்பட்ட போலீசார் நரேசை கைது செய்தனர்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் விசாரணை நடத்துவதற்காக அவர்களை தங்கள் காவலில் எடுத்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கடந்த 16-ம் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டிடிவி தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
கடந்த 17-ம் தேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரட்டை இலை சின்னம் லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா பேசிய ஆடியோ ஆதாரங்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைத்தனர்.
அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
கடந்த 17-ம் தேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனிடம் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.
ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் சென்னை வந்து சம்மன் கொடுத்தனர்.
அதை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார்.
இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது. இன்று இரண்டாவது நாள் விசாரணையில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னம் பெற டெல்லியில் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என களம் கண்டது. இதனால், அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவு போலீஸார் அளித்த சம்மனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டாக பிரிந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என களம் கண்டது. இதனால், அதிமுக கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.