டெல்லியில் கைதான ஹவாலா ஏஜென்ட் நரேஷிடம் 50 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரட்டை இலை சின்னம் லஞ்சம் தொடர்பான வழக்கில் ஹவாலா ஏஜென்ட் நரேஷ் என்பவரை டெல்லியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைதைத் தொடர்ந்து தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க, தினகரன் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, தினகரனை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்த டெல்லி காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சென்னை ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதி மற்றும் அடையாரில் உள்ள தினகரனுடைய வீட்டில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கு இடையில் டெல்லியில் ஹவாலா ஏஜெண்ட எனக் கூறப்படும் நரேஷ் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் இருந்து ஹவாலாப் பணம் 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.