கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலையே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் சபாநாயகர் தனபால்
கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பிறகு தினகரன் தனிமைபடுத்தப்பட்டார்.
தற்போது அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக பிரிந்தன. இந்நிலையில், கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி இணைந்தன. மேலும் அன்று மாலை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் தமிழக துணை முதல்வராகவும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபோ பாண்டியராஜன் தொல்லியல்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்கள்.
டிடிவி தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து அவர்களின் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்.
அந்த கடிதத்தில், தங்களின் ஆதரவை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபை உடனடியாக வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஒருவர் அளித்த பேட்டியில், முதல்வர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.
நேற்று நடந்தது இணைப்பே இல்லை எனவும், இது வணிக ரீதியான உடன்படிக்கை என டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணைந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில் இது குறித்து தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில்,
மீடியா நண்பர்களுக்கு... காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23ந் தேதி உங்களை சந்திக்கிறேன்.
வெளிநாட்டு நிதி மோசடி தொடர்பாக, டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்ட டி.டி.வி. தினகரன், பிரிந்த அணிகள் ஓன்று சேரும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது எனவும், இந்த நிர்வாகிகள் மாற்றங்களுக்காக 2 மாதமாக வீட்டில் இருந்தே படியே செயல் பட்டேன். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திட்டமிட்டே படி நடைபெறும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை.
அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் டி.டி.வி. தினகரன். இதைக்குறித்து பெசன்ட் நகரிம் உள்ள இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது,
வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டது எனவும், இந்த நிர்வாகிகள் மாற்றங்களுக்காக 2 மாதமாக வீட்டில் இருந்தே படியே செயல் பட்டேன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திட்டமிட்டே படி நடைபெறும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தங்கள் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார்.
''நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை" என்று எம்.எல்.ஏ மற்றும் நடிகருமான கருணாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இந்தப் பிளவுக்குப் பின்னர் ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.,க்களுக்கு சசிகலா தரப்பில் ரூ. 2 கோடி முதல் ரூ. 10 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 22 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதில் 22 பேர் டி.டி.வி. தினகரனுக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தினகரன் எதிர்கால அரசியல் பற்றி ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிமுகவுக்குள் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது என தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த தினகரனை அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டெல்லியில் இருந்து விமான மூலமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக அம்மா அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் முன் கூட்டியே வந்து விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, டெல்லியிலிருந்து சென்னை புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
கட்சியிலிருந்து யாரும் நீக்கவில்லை. நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு தான் உண்டு. சிறையிலிருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. யாரும் யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். எல்லோருடனும் நட்புடன் தான் இருப்பார்கள்.
இவ்வாறு கூறினார்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரனுக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
அதிமுகவில் இரு அணிகள் பிளவு காரணமாக ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற உரிமை போர் தேர்தல் கமிஷன் முன்பு நடந்தது.
இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தது.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
அதிமுகவில் இரு அணிகள் பிளவு காரணமாக ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, மேலும் சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டிடிவி தினகரன், மல்லிகார்ஜூன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி தீஸ் ஹசாரி கோர்ட்டில் ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைதான இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று டெல்லி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன.
ஆர்கேநகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லி தில் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர். 5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுகேஷிடம் தினகரன் கேட்டுக்கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லி தனிக்கோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்து இருக்கிறார் டி.டி.வி.தினகரன். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வருகிற 29-ம் தேதி வரை காவல் நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரது நீதிமன்ற காவல் மே 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 8-ம் தேதி அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டுமென எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு டிடிவி தினகரனின் வங்கிக் கணக்கில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவிலான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.