இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
அதிமுகவில் இரு அணிகள் பிளவு காரணமாக ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, மேலும் சுகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் முதல் சிறையில் இருந்து வரும் தினகரன் ஜாமின் கேட்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நிபந்தனை ஜாமினில் இருவரும் தங்களது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ரூ. 5 லட்சம் சொந்த பிணைய தொகையாக கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தினகரன் இன்ரூ அல்லது நாளை ஜாமினில் விடுதலையாவார் என தெரிகிறது.