இரட்டை இலை சின்னம் லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா பேசிய ஆடியோ ஆதாரங்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைத்தனர்.
அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
கடந்த 17-ம் தேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
எனவே 4வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு தினகரனுக்கு டெல்லி போலீசார் உத்தர விட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக தினகரனிடம் இதுவரை 26 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகர் ரூ.50 கோடி விவகாரத்தில் டிடிவி தினகரன் உடனான தொடர்புகளை கூறிய நிலையில் டிடிவி தினகரன் மழுப்பலான பதில்களையே கூறியுள்ளார். டெல்லி போலீசார் ஆடியோ ஆதாரங்களையும், ஆவணங்களையும், வாட்ஸ் அப் தகவல் தொடர்பு பதிவுகளையும் காட்டி கிடுக்கிப்பிடி போட்டதும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. அதன்பிறகே அவர் சில தகவல்களை போலீசாரிடம் கூறி வருவதாக கூறப்படுகிறது.
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே எனக்கு தெரியாது என்று டி.டி.வி. தினகரன் முதலில் கூறினார். ஆனால் சுகேசிடம் பேசியதற்கான ஆதாரங்களைக் காட்டிய பிறகு ஆமாம் இவரைத் தெரியும். இவரை ஐகோர்ட் நீதிபதி என்று நினைத்தேன் என தினகரன் ஒத்துக் கொண்டார். ஐகோர்ட் நீதிபதி இதையடுத்து தினகரனுக்கும், இடைத்தரகர் சுகேசுக்கும் எப்போது, எப்படி தொடர்பு ஏற்பட்டது என்ற விசாரணையை போலீசார் தொடங்கினார்கள்.
டி.டி.வி.தினகரன், தரகர் சுகேஷ், வக்கீல் குமார் ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் அனைத்தும் வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மூவரும் சிலரது பெயர்களை வெளியிட்டனர். அதன்பேரில் இதுவரை சுமார் 15 பேரை டெல்லி போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர்.
கடந்த 8 நாட்களாக நடந்து வரும் விசாரணைகளில் போலீசாருக்கு 50 சதவீத தகவல்களே கிடைத்துள்ளன. பலர் சிக்க வாய்ப்பு சுகேஷ் மற்றும் டி.டி.வி. தினகரனிடம் தொடர்பில் உள்ள பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர். இன்னமும் ஹவாலா பணப் பரிமாற்றம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் பற்றிய விசாரணை ஆகியவை நடத்தப்பட வேண்டியுள்ளது. எனவே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் இணைக் கமிஷனர் தலைமையில் தனிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே விசாரணை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் சந்திரா பேசிய தொலைபேசி உரையாடல் ஆடியோ ஆதாரங்களை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தரப்பில் தினகரன் மீதான குற்றசாட்டு குறித்து மட்டுமே விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டது.
மேலும் சுகேஷிடம் விசாரணை நடத்த 5 நாட்கள்போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. சுகேஷ் சதிராவின் காவல் ஏப்ரல் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது கைதாக வாய்ப்பு இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் இடைத்தரகர் சுகேசை தெரியும் என்று டி.டி.வி.தினகரன் கூறினாலும் இரட்டை இலை சின்னம் பெற யாரிடமும் பேரம் பேச வில்லை, யாரிடமும் பணம் கொடுக்கவும் இல்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.