இரட்டை இலை சின்னத்தை பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது. இன்று இரண்டாவது நாள் விசாரணையில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார்.
இரட்டை இலை சின்னம் பெற டெல்லியில் தேர்தல் கமிஷனுக்கு ரூ. 60 கோடி வழங்குவதாக பேரம் பேசிய வழக்கில் தினகரன் நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
நேற்று பிற்பகல் துவங்கிய விசாரணை இரவு வரை நடந்தது. சுகேஷ் சந்திரனை வைத்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் விசாரணையைமுடித்தது. மேலும் தினகரன் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையின் முடிவில் தினகரனை இன்று பிற்பகல் மீண்டும் ஆஜாராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இரண்டாம் நாள் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் தற்போது நேரில் ஆஜராகியுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.